விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார். அந்த வகையில் 9ம் வார இறுதியில் குயின்சி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு குயின்சி பேசிய முதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   


 


ஏராளமான ரசிகர்கள் :


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புரியாத புதிராக இருந்த குயின்சியின் உண்மையான முகம் பற்றி போட்டியாளர்கள் மட்டுமல்ல ரசிகர்களாலும்  புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்ட குயின்சி மீது வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்துக்கொண்டே இருந்தனர். இந்த கியூட் பேபிக்கு பிக் பாஸ் என்ட்ரிக்கு பிறகு ஏராளமான ஃபேன்ஸ் பேஜ்கள் திறக்கப்படும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துவிட்டார் என்றே சொல்லலாம். 


 



இந்த சீசன் அப்பா - மகள் :


இது வரையில் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனில் எப்படி ஒரு ரொமான்ஸ் ஜோடி இருக்குமோ அதே போல சில உறவு முறைகளும் உள்ளே உருவாவது வழக்கமான ஒன்றாகவே இருந்தது. அந்த வகையில் இந்த சீசனில் அப்பா - மகள் உறவை மெயின்டெய்ன் செய்தது ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி. ஒரு தந்தையை போலவே குயின்சி மீது அன்பும் அரவணைப்பையும் பொழிந்தார் ராபர்ட்.


 






 


எனக்கு பிடித்தது யாரு ?


குயின்சி வெளியிட்ட வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களில்  டாப் 5 லிஸ்டில் உள்ளவர்கள் பற்றி சொல்லவும் என்றதும் அது கொஞ்சம் கஷ்டம் என்றாலும் எனக்கு பிடித்த நபர்களை பற்றி சொல்கிறேன் என பட்டியலிட்டதில் ஷிவின், விக்ரம், அஸிம், மணிகண்டன். அசீம் கேம் பிளே நன்றாக இருக்கும் ஆனால் அது கொஞ்சம் ஹார்ஷாக இல்லாமல் இருக்கலாம். மற்றபடி அவர் மிகவும் நேர்மையாக விளையாடுவார்.


வீட்டில் இருக்கும் போது உணவும் உறவுகளும் எவ்வளவு முக்கியம் என்பதை கற்று கொண்டேன். அனைத்திற்கும் மேல் எனது மனவலிமை அதிகரித்தது. யாரு என்ன பேசினாலும் நீ கரெக்டா இருக்க என தெரிந்தால் அமைதியாக இருந்து விடு அதற்கு பதிலாக பிரச்சினை பண்ண தேவையில்லை என்பதை நான் கற்று கொண்டேன். 


அஸிம் எப்படி ?


அஸிம் பற்றி குயின்சி கூறுகையில் " அவர் ஒரு சிறந்த பிளேயர். அவர் சொல்லும் பாயிண்ட் சரியானதாக இருக்கும் ஆனால் யாரையும் வார்த்தைகளால் புண்படுத்தாமல் கொஞ்சம் அமைதியாக சொன்னால் நன்றாக இருக்கும். கேட்பவருக்கு மனது சங்கடமாகாத வகையில் சொன்னால் நன்றாக இருக்கும். அஸிம் மட்டும் அல்ல அனைவருமே அனைத்தையுமே பொறுமையாக பேசிக்கொண்டால் பிரச்சினை வராது. 


யார் டைட்டில் வெல்வார் ?


என்னை பொறுத்தவரையில் ஒரு ரசிகராக ஷிவின் இந்த சீசன் டைட்டில் வின்னராக வேண்டும் என ஆசைப்படுகிறேன். எந்த சமயத்தில் எல்லாம் நான் இதை பேசினால் பிரச்சினை வரும் என நினைத்து அமைதியாக கடந்து சென்றேனோ அந்த இடங்களில் எல்லாம் ஷிவின் துணிச்சலாக பேசியுள்ளார். அதனால் தான் அவர் இத்தனை நாட்கள் அங்கே இருக்க முடிகிறது. இருப்பினும் யார் எல்லாம் 100 நாட்கள் வீட்டில் தாக்கு பிடிக்கிறார்களோ அவர் அனைவருமே என்னை பொறுத்தவரையில் வின்னர் தான்.  இப்படி பிக் பாஸ் வீட்டில் நடந்தேறிய பல சுவாரஸ்யமான தகவல்களை குயின்சி பகிர்ந்தார்.