‛யார்ரா... இது இங்கே வேகத்தடையை போட்டது’ மலைப்பாம்பை கிராஸ் செய்த நாயின் பேய் பயம்!

 

நாம் ஒன்று நினைப்போம்... நடப்பது ஒன்றாக இருக்கும். இது பல விசயங்களில் நடந்திருக்கிறது. ஏன் நமக்கே கூட அது நடந்திருக்கிறது. சிலவற்றை சொன்னால், கேட்பவர் நம்ப கூட மாட்டார். அந்த அளவிற்கு திகிலான சம்பவங்கள் நிறைந்தது வாழ்க்கை. ஆனால், அது எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்பதில் தான் சஸ்பென்ஸ்.

இங்கே நாம் பார்க்கப் போகும் சம்பவமும் அப்படி தான். என்ன... இந்த சம்பவத்தை சம்பந்தப்பட்டவர் யாரிடமும் கூற முடியாது. ஏனென்றால் அவர் மனிதரல்ல, நாயார்! 

நாய் காமெடிகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ரசித்திருக்கிறோம். அப்படி தான் இதையும் பார்க்க வேண்டும். ஒரு தெருவில், நல்ல இருட்டில் நாய் ஒன்று உலா வருகிறது. அதே தெருவில் சாலையில் கார் ஒன்றும் வருகிறது. திடீரென கார் நடுரோட்டில் நிற்கிறது. காரின் வெளிச்சம் மட்டும் சாலையில் படுகிறது. 



இந்த நேரத்தில் எங்கோ நின்று கொண்டிருந்த நம்ம நாய்க்கு, ‛நம்ம ஏரியாவுல யார்றா... அது...’ என்பது போ, காரை நோய் சீன் போட சீறி வருகிறது. அதில் ட்விஸ்ட் என்னவென்றால், எதிரில் காரின் விளக்கு எரிவதால், சாலையின் நிலை தெரியாமல், குத்து மதிப்பாக காரை நோக்கி வருகிறது. 

அதுவரை எல்லாம் ஓகே... அதற்கு மேல் தான் ட்விஸ்ட். காரை நெருங்கும் போது, சாலையில் நடுவே ஒரு வேகத்தடை ஒன்றில் கால் பட்டு தடுமாறுகிறது நாய். 

வந்த வேகத்தில் அது திரும்பி பார்க்கிறது. காரணம் அந்த சாலையில் அது பல முறை பயணித்திருக்கிறது. அதற்கு அந்த சாலை நன்றாகவே தெரியும். ‛யார்ரா... இது நமக்கு தெரியாம திடீர்னு ஸ்பீடு பிரேக்கர் போட்டது....’ என்கிற கடுப்பு தான் அந்த நாய்க்கு.

இப்போது போன நாய் அப்படியே யூடார்ன் போட்டு பார்க்கிறது. இப்போது அதற்கு கார் விளக்கு வெளிச்சம் சொந்தரவு செய்யவில்லை. மாறாக சாலையை தெளிவாக காட்டுகிறது. அந்த நொடி தான் தாமதம், நாய்... பேய் பார்த்த அதிர்ச்சியில் ஜர்க்காகிறது. 

 

சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை... அது ஒரு ராட்சத மலைப்பாம்பு, ரோடு கிராஸ் செய்து கொண்டிருந்த நேரம் என்பதும், அதை தான் சீண்டி விட்டோம் என்பதும் அப்போது தான் நாய்க்கு தெரிகிறது. அடப்பாவிகளா... எது போறத பார்த்தா... லன்சுக்கு எதையோ தேடுற மாதிரி இருக்கு... அதுட்ட என்னைய கோர்த்து விட்டுட்டீங்களேடா... என்பது போல ஒரு நிமிடம் உயிரை கையில் பிடித்து எஸ்கேப் ஆனது நாய். 


சீன் போட வந்த இடத்தில் சீன் ஆன வகையில், சக நாய் எதுவும் பார்க்கவில்லை என்கிற ஒரு சாதகத்தோடு, ‛ம்... ம்... போ.... போ... ’ என்பது போல அங்கிருந்து எஸ்கேப் ஆனது நாய்!