அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று இரவு வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்ட செய்திகள் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சவுண்ட் சிங்க் வேலைகள் மிச்சமிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இரவோடு இரவாக எல்லா வேலைகளையும் முடித்து 4 மொழிகளில் படம் தயாராகி உள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் அல்லு அர்ஜூன். ஆந்திர வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் புஷ்பராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார் அல்லு அர்ஜூன். மேலும் ஃபகத் பாசில், சுனில், அனசுயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.






இப்படத்தில் சமந்தா நடனமாடியுள்ள ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலில் ஆண்களை பற்றி தவறாக சித்தரிக்கும் வகையில் வரிகள் உள்ளதாக ஆண்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்ததால் படத்தின் ஹைப் அதிகரித்தது. இரண்டு பாகங்களாக உருவாக்கப்படும் இப்படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படம் பல சிக்கல்களுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை அல்லு அர்ஜூனின் ரசிகர்கள கொண்டாடியுள்ளனர். புஷ்பா படம் ரிலீஸ் ஆகும் திரையங்குகள் பாலபிஷேகம், பட்டாசு என களைக்கட்டியுள்ளது. ஆனால் நேற்று இரவு வரை புஷ்பா திரைப்படத்தை சவுண்ட் மிக்சிங்கில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க தீவிரமாக வேலை நடந்துகொண்டிருந்தது.






ஆடியோ சிங்க் பிரச்சனை இருப்பதாக படத்தின் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி ட்வீட் செய்திருந்தார். ஒரு வழியாக எல்லாம் தீர்க்கப்பட்டு படம் 4 மொழிகளில் தயாரானதால் படம் சரியான நேரத்திற்கு வெளியாகி உள்ளது. ஆனால் மலையாள ஆடியோ மட்டும் இன்னும் சரி செய்யாததால் கேரளத்திலும் தமிழில் படம் வெளியாகி இருக்கிறது. நாளை அதாவது டிசம்பர் 18 அன்று மலையாளத்தில் திரைப்படங்களை காணலாம் என்று இ4 என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூறியுள்ளது. 250 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.