தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அந்த படங்கள் தமிழிலும் டப் செய்து ஒரே சமயத்தில் வெளியிடப்படவுள்ளது. அந்த வகையில் டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்தான் ‘புஷ்பா’ . அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா பேரிங்கில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணைய ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்தது. சமீபத்தில் தமிழ், தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான புஷ்பா டிரைலரை கண்ட சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளினர்.







செம்மரக்கடத்தலை அடிப்படையாக கொண்டு உருவாகும் பாத்தில் , மிரட்டும் காவல் அதிகாரியாகவும்ன் , அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகவும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் , மல்லுவுட் ஸ்டார் ஃபஹத் பாசில் . புஷ்பா படத்தின் அனைத்து மொழி தியேட்டர் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட நிலையில் , தற்போது OTT பிளாட்ஃபார்முக்கான வெளியீட்டு உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று புஷ்பா படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சில அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. ஆடியோ , சாட்டிலைட் என புஷ்பா படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. புஷ்பா படம் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என கூறப்படும் நிலையில் , படம் வெளியாவதற்கு முன்னதாகவே அது 250 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது படக்குழுவினரை குஷியில் ஆழ்த்தியுள்ளது.






இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் அதாவது புஷ்பா தி ரைஸிங் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாகி 90 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.