தற்போது மிகவும் பிரபலமான ‘ஓ சொல்றீயா..’ பாடலுக்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.


சென்னையில் இன்று  ‘புஷ்பா’ படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அல்லு அர்ஜூன், தான் தமிழ்நாட்டில் பிறந்து 20 வருடங்கள் இங்குதான் வாழ்ந்ததாகவும், நல்ல படத்தோடு இங்கு வர வேண்டும் என்பதற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் கூறினார். தான் பேசும் தமிழ் தவறாக இருந்தாலும் தமிழில்தான் பேசுவேன் என்றும், அதுதான் அழகாக இருக்கும் என்றும் பேசினார். மேலும், சென்னையில் பிறந்தவன் தான் என்றும், தமிழ்நாட்டில் தன் படம் வெற்றி பெற்றால்தான் சாதித்தது போல் உணர்வேன் என்றும் கூறினார். கடைசியாக தெலுங்கு பேசுற தமிழ் பையன் என தன்னை தன் நண்பர்கள் அழைப்பார்கள் எனவும் கூறினார். மேலும், இந்தப்படம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றும், செம்மரக்கடத்தல் குறித்து சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.


இதனிடையே,  ‘ஓ சொல்றீயா..’ பாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் அல்லு அர்ஜூனிடம், இந்தப் பாட்டு மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. அதேநேரத்தில் அந்தப் பாடலின் வரிகளுக்கு, ஆண்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். நீங்களும் ஒரு ஆண் தான், நீங்க எப்படி ஃபீல் பண்றீங்கனு கேட்க, அப்படியே மைக்கை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் திருப்பும் அல்லு அர்ஜூன், ‘உண்மைதானே’ என்று சிரிப்புடன் கூற, அருகில் இருக்கும் அனைவரும் சிரித்தனர்.






இந்த பாடலில் உள்ள வரிகள் பெண்களின் உருவ கேலி, நிற கேலி உள்ளிட்டவை குறித்து பேசுவதாக இருக்கிறது. அத்துடன், ஆண்கள், பெண்கள் குறித்து என்னென்ன நினைக்கிறார்கள் என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான  ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என  ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில்  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள்  நடித்துள்ளனர். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண