தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. தீபாவளியை முன்னிட்டு அல்லு அர்ஜூன் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement


 அல்லு அர்ஜூனுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் சுகுமார் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு உருவாயிருந்த இது,  தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் புஷ்பா கதாபாத்திரத்தை கொண்டாடினர். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பு அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.






இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் அதன் ரிலீஸ் குறித்து ஆர்வத்துடன் இருந்தனர். தயாரிப்பு முடிந்து 2024-ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி புஷ்பா படம் திரயரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.


புஷ்பா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு:


புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல்லு அர்ஜூன் புதிய போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


ஓடிடி உரிமை:


புஷ்பா- 2 படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு என்று கூறப்படுகிறது.


புஷ்பா படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை ரூபாய் 650 கோடி வரை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரசிகர்கள் மகிழ்ச்சி: 


புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். ஃபகத் ஃபாசில் புஷ்பா-2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் வெளியிடுகின்றனர். புஷ்பா படத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடிய ”ம்ம்ம் சொல்றியா” பாடல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.