அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. ஆனால் அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றுவிட்டது. 


விளையாட்டு வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் என பலரும் புஷ்பாவை இமிடேட் செய்து அப்ளாஸை அள்ளினர். வசூல் ரீதியாகவும் புஷ்பா நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக படம் அனைத்து தரப்பையும் கவரவில்லை. படத்தில் பல சறுக்கல்கள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் அடுத்த பாகத்தை தொடங்கிவிட்டது புஷ்பா படக்குழு. 





இது ஒருபுறமிருக்க, தற்போது வெளியாகி இந்தியா முழுவதும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது கேஜிஎஃப் பார்ட் 2. பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்ட கேஜிஎஃப் அதற்கான வேலையை சரியாக செய்துகொண்டிருக்கிறது. ரூ.800 கோடியைத் தாண்டி வசூலில் மிரட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேஜிஎஃபின் மிரட்டலான மேக்கிங், திரைக்கதை அமைப்பு புஷ்பா   படக்குழுவை சீண்டியுள்ளது. 


கேஜிஎஃபின் வெற்றிக்கு பிறகு புஷ்பா படக்குழு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தற்போது படப்பிடிப்புக்கும் ரெஸ்ட் விடப்பட்டுள்ளதாம். அதிகம் எதிர்பார்த்த புஷ்பாவை விட கேஜிஎஃப் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதனால் புஷ்பா 2வை மிரட்டலாக உருவாக்க வேண்டுமென கதையிலும், மேக்கிங்கிலும் பல மாற்றங்களை கொண்டு வர புஷ்பா இயக்குநர் முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்னும் அதிக பிரம்மாண்டத்துடன் புஷ்பா 2 மீண்டும் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.




யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள  ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜனங்களைக் கவர்ந்துள்ளது. மேலும் ராக்கி பாய் என்ற கோபமான இளைஞன் அவதாரத்தில் யஷை ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த படத்தின் மூலம் ஒரு இந்திய நட்சத்திரமாக யஷின் புகழ் அதிகரித்துள்ளது. இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டு படங்களிலும் பணிபுரிந்ததற்காக பாராட்டப்பட்டார்.  படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் படத்தின் மூன்றாம் பாகத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் மூன்றாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.


தற்போது அதனை படத்தின் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கன்னட செய்தி சேனலுடன் பேசும்போது இதை உறுதிப்படுத்தினார்.