கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது நிறைவேறாத ஆசை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) பேசியுள்ளார்.
”என்னுடைய நடிப்பு கரியர் புனித் ராஜ்குமாருடன், ‘அபி’ என்றப் படத்தில்தான் துவங்கியது. அவருடன் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளேன். அப்போது நடிகைகளுக்கு தனி கேரவன்களுக்கு இல்லாத காலம் இருந்தது. அப்போது அவர் தன்னுடைய கேரவனை எனக்குப் பயன்படுத்த கொடுத்தார். அவருக்கு கேரவனினுள் இருப்பதை விட செட்களில் உள்ள மனிதர்களுடன்தான் இருக்கப் பிடிக்கும்.
அவருக்கு சினிமா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவருடைய திட்டங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கும் தெரியும். அவருக்குப் படங்களை இயக்க விருப்பம் இருந்தது. என்னையும் தன்னுடைய அண்ணான் சிவராஜ்குமாரையும் வைத்து ஒரு படத்தை இயக்க விரும்பினார். என்னையும், அவரது அண்ணனையும் வைத்து ஒரு மியுசிக் வீடியோ எடுக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்” என தெரிவித்துள்ளார். தன்னை விட 13 வயது சிறியவரான புனீத் தனக்கு தம்பி என்பதை விட மகன் என்றே சொல்லலாம் என சிவராஜ்குமார் தெரிவித்தார். புனித்தை இழந்தது மகனை இழந்தது போன்று உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்