கன்னட சூப்பர் ஸ்டார் , அப்பு  என கொண்டாடப்பட்ட புனித்ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. இன்னும் அவரது ரசிகர்கள் அவரின் இழப்பிலிருந்து மீளவில்லை. உயிருடன் இருந்த பொழுது புனித் ராஜ்குமார் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தவர். இறந்த பின்னர் அவரின் கண்கள் தானமாக பெறப்பட்டு, அவரது 2 கண்கள் மூலமாக ந4 பேருக்கு பார்வை கிடைத்தது.  புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டதால், அவரை பின்தொடரும் ஆயிரக்கணக்காக ரசிகர்கள் அவரை போல கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.




இது ஒரு புறம் இருக்க , புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு அவரின் அதீத உடற்பயிற்சிதான் காரணம் என அவரை பரிசோதித்த மருத்துவர் தேவி ஷெட்டி கூறியது போன்ற வாட்ஸப் பதிவு ஒன்று உலா வந்துக்கொண்டிந்த சூழலில் அதனை தேவி ஷெட்டி மறுத்துள்ளார். மேலும் இது போன்ற போலியான செய்திகளை பரப்புவர்களை அவர் கண்டித்துள்ளார்.



வாட்ஸப்பில் பரவி வரும் செய்தி பின்வறுமாறு :


"என் நண்பர்கள் அனைவருக்கும்....


கடந்த சில ஆண்டுகளில், எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த குறைந்தது 8 முதல் 9 பேரை நான் இழந்துவிட்டேன். 40 வயதுகளில் இருக்கும் பிரபலங்களும் கூட இறந்துவிட்டனர். காரணம் தாங்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக  அவர்கள் வரம்பு மீறிய உடற்பயிற்சிகளை செய்கின்றனர். இந்த பட்டியலில் இன்று புனித் ராஜ்குமாரும் இணைந்துள்ளார்.


வாழ்க்கையில் எதிலும், MODERATION தான் மந்திரம். பூஜ்ஜியம் அல்லது 100ன் எந்த உச்சமும் சரியல்ல. மிதமான உடற்பயிற்சி, வெறும் 20 நிமிடம் போதுமானது. எல்லாவற்றையும் சாப்பிடுங்கள் உங்கள் முன்னோர்கள் சாப்பிட்டதை மட்டும் சாப்பிடுங்கள், உங்கள் ஊரில் உள்ள உள்ளூர் மற்றும் பருவகால உணவுகளை சாப்பிடுங்கள். முட்டைக்கோஸ், கிவி அல்லது ஆலிவ் எண்ணையெல்லாம் வேண்டாம். 7 மணிநேரம் முழுவதுமாக தூங்குவது, ஸ்டெராய்டுகளை உண்ணாமல் உங்கள் உடலுக்கு மரியாதை செலுத்துவது, செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகள் ஆகியவைதான் நீங்கள் செய்ய வேண்டியவை.நீங்கள் வளரும் போது சாப்பிட்ட அனைத்தையும் சாப்பிடுங்கள், சிறிய அளவில், 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்யுங்கள்...நல்ல நடைப்பயிற்சி செய்தபின் அனைத்து சப்ளிமெண்ட்டுகளையும் நிறுத்த வேண்டும்....நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை குடிக்கலாம். 'புகைபிடிப்பதை மட்டும்  விட்டுவிடாதீர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஜோடி புகைக்கலாம் . எதையும் மிதமாக சேர்க்கலாம். உங்கள் உடல் உங்களிடம் என்ன சொல்கிறதோ அதை கேட்டு நடங்கள்.




40 வயதிற்குள் உடல் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது, 50 இன்னும் அதிகமாக, 60 பிளஸில் உங்கள் உடல் மெதுவாகத் தொடங்குகிறது, 70 பிளஸ், உங்கள் உடல் முடங்க தொடங்குகிறது, 80 பிளஸ் ஒவ்வொரு வருடமும் போனஸ், நீங்கள் 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நன்றியுடன் இருங்கள், மெதுவாகச் செயல்படுங்கள், உங்கள் இதயம் வேகமாக செயல்பட தொடங்கும் எனவே ஓய்வு அவசியம்.  உங்கள் உடலும் மனமும் நீங்கள் ஒருமுறை அனுபவித்த மன அழுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளிப்புறமாக நீங்கள் அழகாக இருக்க முடியும் , ஆனால் உள் உறுப்புகள் வயதாகின்றன.நீங்கள் 40+ வயதுடையவராக இருந்தால், மேலே உள்ளவற்றைப் படித்துவிட்டு, மேலே உள்ளதைத் தவிர வேறு ஏதாவது செய்கிறீர்கள் என்றால், இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள்!! நீங்கள் மற்றொரு புள்ளிவிவரமாக முடிக்க விரும்பவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என அந்த பதிவு இருக்கிறது. முற்றிலும் திசை திருப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்ஸப் செய்திக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.