சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் நிகழ்ச்சியாக இருப்பது  விஜய் டிவியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. மிகவும் கலகலப்பான இந்த என்டர்டெயின்மென்ட் ஷோவின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இருந்து வாரந்தோறும் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்டார். 



கெட்டப் ரௌண்ட்:


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அனைவரும் கவலைகளை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி. கோமாளிகள் அடிக்கும் லூட்டிகளுக்கு ஒரு அளவே இருக்காது. அப்படி இந்த வாரம் ஒவ்வொரு கோமாளியும் ஒவ்வொரு போட்டியாளர் போன்ற கெட்டப்பில் களம் இறங்கினர். அந்த வகையில் இந்த வாரம் ஷெரின்போல புகழும் ஸ்ருஷ்டியைபோல குரேஷியும் கெட்டப் போட்டு இருந்தனர். அவர்களைப்போல கெட்டப் மட்டும் போடாமல் அவர்களை போலவே நடை உடை பாவனை என அனைத்தையும் மாற்றி அவர்கள் இருவரையும் பங்கப்படுத்திவிட்டனர்.


கோமாளிகளாக புகழும், குரேஷியும் செய்த லூட்டிகள் சமையல் களத்தையே வேற லெவலுக்கு எடுத்து சென்றுவிட்டது. கத வாரத்திற்கான புரோமோ வெளியானதிலிருந்து கடந்த வாரத்திற்கான நிகழ்ச்சியை காண மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.  


ஷெரினைப்போல கெட்டப் போட்டு இருந்த புகழ், ஷிரிஷ்டிபோல கெட்டப் போட்டிருந்த குரேஷியை தாறுமாறாக தாக்கி ' என்ன மினுக்குறா யா யப்பா' என செம்மையாக கலாய்த்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.