நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். 


1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித்  1993 ஆம் ஆண்டில் ரிலீசான அமராவதி படத்தின் மூலம் தமிழில்  கால் பதித்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பின்னர் காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் அஜித் திகழ்கிறார். 






தன் ரசிகர் மன்றத்தை கலைத்தது முதல் அவர்கள் ஆர்வம் மிகுதியால் ஏதாவது செய்யும் போது கண்டிப்பது வரை செய்வதால் அஜித் மீது பெரும்பாலும் அனைவருக்கும் நல்ல அபிப்ராயமே உள்ளது. இதனிடையே தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ள அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். இந்த படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் அவர் மேற்கொண்ட பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. 


இதனிடையே சில தினங்களுக்கு முன் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு செய்தார். அதனை ரசிகர்கள் பலரும் அன்னதானம், இரத்ததானம், நலத்திட்ட உதவிகள் என பல வகைகளில் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜித் ரசிகர்கள் சார்பாக ஆழ்கடலுக்கு அடியில் அஜித்தின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை குறிக்கும் வகையில் பேனர் வைத்து  கொண்டாடியுள்ளனர். இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண