தமிழ் சினிமாவின் ஐகான் இயக்குனர் மணிரத்னத்தின் காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், படத்தின் முதல் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் உலக அளவில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 


 



பலரின் கனவு நனவானது :


எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையில் காட்சிப்படுத்தப்பட்ட நனவாகி உள்ளது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரமாண்டமான ஒரு வெற்றி படமாக சாதனை படைத்துள்ளது. 


பாக்ஸ் ஆபிஸில் சாதனை :


சோழ வம்சத்தின் பாரம்பரியத்தை அடிப்படியாக கொண்ட அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சரித்திர காவிய திரைப்படம் கோலிவுட்டில் 500 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இதுவரையில் வெளியான திரைப்படங்களில் அதிக அளவிலான வசூலை ஈட்டிய திரைப்படமாகவும் அமைந்துள்ளது. 


 






 


PS1 ஓடிடி ரிலீஸ் குறித்த ஹாட் நியூஸ் :


திரையரங்குகளில் வெளியாகி இன்றோடு ஒரு மாத காலம் ஆகும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியாகும் நாள் குறித்து மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். இது குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு ஹாட் நியூஸ். அமேசான் பிரைம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன் 1"  படத்தின் ஓடிடி ஆக்சஸ் திறந்துள்ளது. 


 






 


பயனாளர்கள் அதிருப்தி :


இருப்பினும் அமேசான் பிரைம் பயனாளர்கள் ஆரம்ப நிலையில் PS1 திரைப்படத்தை வாடகைக்கு எடுத்து கண்டுகளிக்கலாம். நவம்பர் 4 ஆம் தேதி  முதல் அனைத்து அமேசான் பிரைம் பயனாளர்களும் பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம் என ஸ்ட்ரீமிங் நிறுவனம் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.


இந்த திட்டத்தால் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் பயனாளர்கள். திரையரங்குகளில் படம் திரையிடப்படுவது முடிந்தவுடன் ஸ்ட்ரீமிங் சேவையை குழுவை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறிவிட்டு இப்போது மீண்டும் வாடகை செலுத்துமாறு கேட்கப்படுவது தான் அதிருப்திக்கு காரணம். மேலும் 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் இந்தி வெர்ஷன். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் அமேசான் பிரைம்.