அமெரிக்காவின் சான் டியாகோவுக்கு விமானத்தில் சென்ற கமல்ஹாசன் தனது iPad-ல் புராஜெக்ட் கே குறித்து எழுதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் புராஜெக்ட் கே படத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர அபிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட உச்சக்கட்ட திரை நட்சத்திரங்கள் புராஜெக்ட் கே-வில் இணைந்துள்ளனர். சயின்ஸ் ஃபிக்சனை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புராஜெக்ட் கே படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. 


மார்வெல் காமிக்ஸ் படங்களை போல், சூப்பர் ஹீரோ ஜானரில் புராஜெக்ட் கே உருவாகி வருவதால், அதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்துள்ளது. கிராபிக்ஸ் வேலைகளை பிரபல ஹாலிவுட் சிஜி நிறுவனம் மேற்கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள புராஜெட்க் கே-வின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் அமெரிக்காவில் வெளியாக உள்ளது. அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெறும் காமிக்- கான் சர்வதேச நிகழ்ச்சியில் புராஜெக்ட் கே படத்தின் தலைப்பு, டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அரிவிக்கப்பட உள்ளது. இதை கமல்ஹாசன், தீபிகா படுகோன், பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் காமிக்- கான் விழாவில் அறிவிக்க உள்ளனர். சர்வதேச காமிக்- கான் நிகழ்வில் பங்கு கொள்ளும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை புராஜெக்ட் கே பெற்றுள்ளது. 





புராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் வெளியாவதை ஒட்டி அமெரிக்காவுக்கு சென்றுள்ள கமல்ஹாசனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. கலிஃபோர்னியாவுக்கு விமானத்தில் செல்லும் கமல்ஹாசன், தனது iPad-ல் தான் எழுதியதற்கு "The write way to fly #k" என தலைப்பு வைத்ததுடன், புராஜெக்ட் கே படத்துக்காக காத்திருக்கும் வெறியர்களுக்கு மிகப்பெரிய அளவில் சர்பிரைஸ் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளர். முன்னதாக நேற்று அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் புராஜெக்ட் கே குறித்த சிறிய வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. 15 நொடிகளே கொண்ட வீடியோவில் புராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் 20ம் தேதி வெளியாக உள்ளதாகவும், அன்று புராஜெக்ட் கே என்றால் என்ன என்பது குறித்து தெரிய வரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, இன்று மற்றும் நாளை நடைபெறும் காமிக்-கான் விழாவில் வெளியாகும் புராஜெக்ட் கே கிளிம்ஸ்காக காத்திருக்கும் ரசிகர்கள், படத்தின் ஒவ்வொரு அப்டேட்களையும் ட்ரெண்டாகி வருகின்றனர்.