2 குழந்தைகளுடன் நடு தெருவில் நின்ற சிம்ரன் - உடனடியாக உதவிய தயாரிப்பாளர்! என்ன நடந்தது?

தனது 2 குழந்தைகளுடன் சிம்ரன் கஷ்டப்பட்டு நடுத்தெருவிற்கு வந்த போது நான் தான் உதவி செய்தேன் என்று தயாரிப்பாளர் தாணு பேசியிருக்கிறார்.

Continues below advertisement

தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். பிஸியான நடிகையாக ஜொலித்தார். நடிச்ச படமெல்லாம் ஹிட்டுன்னு சொல்ற அளவிற்கு நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தார். அஜித், விஜய், விஜயகாந்த், கமல் ஹாசன், சூர்யா, பிரபு தேவா என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்.

Continues below advertisement

விஐபி படம் மூலமாக அறிமுகமான சிம்ரன் ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி டான்ஸிலும் கலக்கியவர். டான்ஸில் விஜய்க்கு டஃப் கொடுக்க கூடிய நடிகை என்றால் அது சிம்ரன் மட்டும் தான் என்று சொல்லும் அளவிற்கு இவர்களது டான்ஸ் இருக்கும். 


விஜய் உடன் இணைந்து இவர் ஆடிய ஆல் தோட்ட பூபதி என்ற பாடலை அவ்வளவு சீக்கிரம் யாராலயும் மறந்துவிட முடியாது. சினிமாவில் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே 2003 ஆம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கின்றனர். மகனுடன் ரீல்ஸ் செய்த வீடியோக்களை இவர் வெளியிட்டிருக்கிறார். ரஜினியுடன் இணைந்து 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். 

இப்போது இவரது நடிப்பில் சப்தம், தி லாஸ்ட் ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், விகடன் நிகழ்ச்சியில் அவருக்கு எவர்க்ரீன் நடிகைக்கான விருதை தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குநர் வசந்த் இருவரும் இணைந்து வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் பேசிய தாணு, சிம்ரன் விஐபி படத்தில் நடிக்க வந்தது குறித்தும், அவருக்கு செய்த உதவி பற்றியும் பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு பிரைவேட் நம்பரிலிருந்து போன் வந்தது. நான் எடுக்கவில்லை என்பதால் நான் தான் சிம்ரன், எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டு மெசேஜ் அனுப்பினார். அதன் பிறகு நான் போன் செய்து என்ன ஹெல்ப் என்று கேட்டேன்.


அதற்கு சிம்ரன் நான் குழந்தைகளை அழைத்துக் கொண்டு லண்டனுக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருந்தேன். ஆனால், நேரம் முடிந்துவிட்டது. எக்ஸ்டெண்ட்டும் பண்ண முடியாது என்று சொல்லி காலி செய்ய சொல்கிறார்கள். ஆனால், இப்போது நான் குழந்தைகளுடன் இருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களால் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டார். பண உதவி வேண்டாம். தங்குவதற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நான் உடனே லண்டனில் இருக்கும் ஒருவருக்கு போன் செய்தேன், ஆனால், அவர் அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறினார். மற்றொருவருக்கு போன் செய்யவே அவரும் லண்டனில் இருப்பதாக கூற, சிம்ரன் நம்பர் வாங்கி அவரை தொடர்பு கொண்டார். அவர் சிம்பரனுக்கு பாதுகாப்பான இடத்தை அரேஞ் பண்ணி கொடுத்தார்.

அதே போல் என்னதான் அவர் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் அவரது முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் என்ற அடிப்படையில் எனக்கு போன் செய்து உதவி கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறினார். அபோது பேசிய சிம்ரன், அவர் மட்டும் உதவி செய்யவில்லை என்றால் நான் எங்கு தங்கியிருப்பேன் என்று யோசிக்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola