இயக்குநர் மகிழ் திருமேனியால் தான் பட்ட கஷ்டத்தை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன். தற்போது பட தயாரிப்பு குறைந்து விட்ட நிலையில் அன்றைய காலத்தில் மிகப்பெரிய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்தார். இவர் ஒரு நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மகிழ் திருமேனியை தாறுமாறாக விமர்சித்துள்ளார். 


அதாவது, “மகிழ் திருமேனின்னு ஒருத்தன் இருந்தான். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தால் நான் அனைத்து படத்தையும் இழந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்ப சின்ன படம் பண்ணலாம் என சொன்னார்கள். கௌதம் மேனன் உதவியாளர் என மகிழ் திருமேனியை சொன்னார்கள். நான் வேண்டாம் என முதலில் சொன்னேன். ஒன்றரை கோடி பட்ஜெட் என கூறி படம் ரிலீசாகும் போது ரூ.4.50 கோடி ஆகிவிட்டது. படம் மொத்தமாக படுத்து விட்டது. ஒரு ரூபாய் கூட லாபமில்லை. சேட்டிலைட் உரிமை மட்டும் ரூ.40 லட்சத்துக்கு வாங்கினார்கள்.


மகிழ் திருமேனி கேமரா செட் பண்ணி விட்டு பாத்ரூம் சென்று விடுவான். எப்படா வருவான்னு காத்துகிட்டு இருக்கணும். அவனெல்லாம் ஒரு மனுஷன்னு இருக்கான்னு பாருங்களேன். மகிழ் திருமேனிக்கு இப்ப ஒரு படம் கொடுத்திருக்காங்க. அவன் வாழ்வதில் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.எந்த அளவுக்கு ஒரு மனிதரை டார்ச்சர் பண்ண முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் மகிழ் திருமேனி தான். இதை என்னுடைய அனுபவத்தில் தான் சொல்கிறேன். மற்றவர்களிடத்தில் எப்படி என தெரியவில்லை. அவனுக்கு நான் கெடுதல் பண்ணக்கூடாதுன்னு செய்யல.


எனக்கு முன்தினம் பார்த்தேனே பார்த்து விட்டு அருண் விஜய்யும், படத்தின் லோகேஷனை பார்த்து விட்டு ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகனும் போன் பண்ணினார்கள். இதில் மோகன் லோகேஷன் நல்லா இருக்கு என பாராட்டினார். நான் அதற்கு அதெல்லாம் நல்லா இருக்கும். ஆனால் படம் நல்லா இருக்காது என சொன்னேன். அருண் விஜய் என்னிடம் நான் மகிழ் திருமேனியுடன் இணைந்து படம் பண்ணலாம் என நினைக்கிறேன். அவர் எப்படி என விசாரித்தார். நான் நினைத்தால் எதாவது சொல்லி மகிழின் வாழ்க்கையை காலி பண்ணியிருக்க முடியும்” என மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார். 


மகிழ் திருமேனியின் சினிமா வாழ்க்கை


முன்தினம் பார்த்தேனே படம் மூலம் இயக்குநரான மகிழ் திருமேனியை,  அருண் விஜய்யை வைத்து இயக்கிய தடையறத் தாக்க படம் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் அஜித்தை வைத்து விடா முயற்சி படத்தை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.