மௌனம் பேசியதே படத்தின் ஷூட்டிங்கில் சூர்யாவுக்கு இயக்குநர் அமீருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அமீர் இயக்குநராக அறிமுகமான படம் “மௌனம் பேசியதே”. இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, நந்தா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஒருவராக அமீர் மாறினார். ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நட்னத பிரச்சினைகளை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அதில், “அமீரை மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்தது நடிகர் சூர்யா. அந்த படம் பூஜை அழைப்பிதழ் அடிச்சி அனைவருக்கும் கொடுத்து விட்டார்கள். ஒருநாள் அமீர் மற்றும் சூர்யாவை தயாரிப்பு தரப்பு வரச் சொல்கிறது. அப்போது சூர்யாவிடம், உங்களுடைய முந்தைய படமான ‘நந்தா’ படத்தின் மூலம் எங்கள் நிறுவனத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் நிறைய நாள் ஷூட்டிங் நடந்ததால் கொஞ்சம் இழப்பு ஏற்பட்டது. அதனால் அதை சரி செய்ய ‘வல்லரசு’ படத்தின் இயக்குநர் மகாராஜனுடன் இணைய தயாரிப்பு தரப்பு சொல்கிறது. 


அப்படி மகாராஜனுடன் சூர்யா படம் பண்ணிருந்தால் அது அவரது கேரியரில் மிகப்பெரிய உயர்வை கொடுத்திருக்கும். உடனே, சூர்யா நான் மகாராஜனுடன் படம் பண்ணுகிறேன். ஆனால் அமீருக்கு வாக்கு கொடுத்துள்ளேன். யார் அந்த படத்தை தயாரித்தாலும் நான் அமீர் இயக்கத்தில் நடித்து விட்டு வருகிறேன். அப்படி சூர்யா தான் இயக்குநர் அமீருக்கு வாழ்க்கை கொடுத்தார். அதனால் சொன்ன தேதியில் பூஜை போடப்பட்டது. படத்தின் ஷூட்டிங்கில் சூர்யாவிடம் அமீர் நடந்த விதத்தால் அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது. மௌனம் பேசியதே படம் வெளியான பிறகு யாரும் அமீரை தேடி அடுத்தப்படம் பண்ண வரவில்லை. 


ஒன்றரை ஆண்டு காத்திருப்புக்குப் பின், நண்பர்களிடம் பணம் பெற்று ‘ராம்’ படத்தை இயக்குகிறார். அப்படத்தின் பூஜைக்கு சிவகுமார் என்னை அழைத்து சென்றார். என்னதான் சூர்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும் சொந்த படம் எடுக்கிறான் வா என்றே சிவகுமார் என்னை கூட்டிச் சென்றார். ராம் படம் ரிலீசாகி அமீருக்கு ரூ.58 லட்சம் கடன், தினமும் ஒரு 
விநியோகஸ்தகர் வந்து திட்டிட்டு போறாரு. இந்த கடனை அடைக்க வாங்கிய காசுக்கு தான் எனக்கு பருத்தி வீரன் படம் பண்ணித் தர்றாரு. நான் அப்போது சினிமாவிலேயே இல்லை. 4 இடத்தில் கடன் வாங்கி தான் பணமே கொடுக்கிறேன். 


அப்போ என்னிடம் சூர்யாவுக்கு கதை இருப்பதாக அமீர் சொன்னார். நான் சென்று சூர்யாவிடம் பேசி சமாதானம் பண்ணி அழைத்து வந்தேன். அந்நேரம் சூர்யாவுக்கு தாணு மற்றும் மோகன் நடராஜன் ஆகியோர் தயாரிப்பில் படம் இருந்தது. ஒன்றரை வருடம் கழித்து படம் பண்ணுவதாக கூறுகிறார். ‘கண்ணபிரான்’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது என அந்த நேர்காணலில் நடந்த சம்பவங்களை ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.