இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது தொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோ வீடியோ சூட்டிங்கிற்காக படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கு சிம்பு ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர். வடசென்னை படத்திற்கு முன்பே சிம்பு - வெற்றிமாறன் காம்பினேஷனில் உருவான படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு பாதியிலேயே நின்றது. இதன் பின்பு வெற்றிமாறனும் தனுஷை வைத்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி
அதேபோன்று நடிகர் சிம்புவும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் மீண்டும் புதிய படம்குறித்த தகவல் உறுதியானதை தொடர்ந்து சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வெளியானால் சிம்பு சினிமா கரியரில் உச்சத்தை தொடுவார் என்பதே பலரது கணிப்பு. ஆனால் பழம் நழுவி பாலில் விழும் கதை போல படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்திற்கு பல பிரச்னைகள் வர தொடங்கிவிட்டது. வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இப்படம் வடசென்னை 2 என்றும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதற்கு தனுஷ் ராயல்டி கேட்பதாகவும் கூறப்பட்டது.
அதிக சம்பளம் கேட்கும் வெற்றிமாறன்
பின்னர், இயக்குநர் வெற்றிமாறன் இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனுஷ் காபிரைட்ஸ் கேட்பதிலும் தவறு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். எனவே, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் ராஜன் வகையறாக்களின் கதை என்றும் குறிப்பிடப்படுகிறது. வெற்றிமாறன் படத்தில் நடிக்க டோலிவுட் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை காத்திருக்கின்றனர். சிம்புவும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாலும், இப்படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணுவிற்கு தாராளமாக செலவு செய்ய மனசு இல்லை என தெரிகிறது. சிம்புவின் சம்பளம் ஒரு பக்கம் வெற்றிமாறன் கேட்கும் சம்பளமும் பிரச்னையாக பார்க்கப்பட்டது. இதனால், இப்படத்தை தொடங்குவதில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சிம்புவிடம் கொடுத்த முன்பணத்தை அவர் திரும்ப கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயக்கம் காட்டும் கலைப்புலி எஸ்.தாணு
இந்நிலையில், தானாக சேர்ந்த கூட்டம் போன்று சிம்பு காம்போவில் உருவாகும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருக்கிறாராம். அதனால், இப்படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிற்கு பட்ஜெட் தான் காரணம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெற்றிமாறன் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படம் வெற்றிக்கு பிறகு சிம்பு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.