உளவுத்துறை , நினைக்காத நாளில்லை என பல படங்களை இயக்கியவர் தயாரிப்பாளர் ராஜன். இவரின் துணிவான பேச்சிற்காகவே ஏக்கப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராஜனாகத்தான் இருப்பார். திருட்டு விசிடி ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய பெருமை ராஜனையே சேரும். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த அவர் திருட்டு விசிடி ஒழிப்பு பிரச்சனையால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது. ஆனால் அதனை எதிர்த்து எனக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த் என சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில்”கே.ராஜன் நீ உன் பள்ளிக்கூடம் மட்டும் பார். நீ VCD விவகாரம் குறித்து தொடர்ந்து போராடினால் உன் தலையை எடுத்து விடுவோம் என எழுதி ஒட்டிவிட்டு சென்றார்கள். அது குறித்து அறிந்த விஜகாந்த் மறுநாளே அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திருட்டு விசிடி-யை ஒழிக்க போராடும் கே.ராஜனுக்கு ஏதாவது ஆபத்து என்றால் இந்த நடிகர் சங்கம் சும்மா இருக்காது என ஆதரவாக இருந்தார். அதே போல சரத்குமார் மற்றும் ரஜினிகாந்தும் ஆதரவு அளித்தனர். வேறு எந்த நடிகரும் வாய் திறக்கவே இல்லை. அந்த சமயத்தில் எனக்கு படங்கள் எல்லாம் கிடையாது. ஆனாலும் நான் மற்றவர்களுக்காத்தான் போராடினேன். விஜய், அஜித், சூர்யா , விக்ரம் என யாருமே ஆதரவா இல்லை. விசிடி-யை ஒழித்த பிறகு சம்பளத்தை மட்டும் கோடி கோடியாக ஏற்றிவிட்டனர். ஆனால் அதற்காக யாருமே ஒரு நன்றி கூட எனக்கு சொல்லவில்லை. விஜயகாந்திற்கு பயமே கிடையாது. அவர் மதுரை சிங்கம். தினமும் உடற்பயிற்சி செய்வார். லெக் ஃபைட்டர் என பெயர். நான் அன்னைக்கு பார்த்த விஜயகாந்த் வேற, இப்போ அவரை பார்த்தா நான் அழுதுடுவேன். அவர் நல்லாயிருக்கணும். அவர் எல்லோரையும் சமமாக நடத்துவார். விஜயகாந்த் ஒரு தமிழன். பண்பாடு மிக்க நடிகர் அல்ல ஒரு தலைவர்“ என தெரிவித்திருக்கிறார்.