மோகன் ஜி இயக்கியுள்ள பகாசூரன் படம் சாதி சார்ந்த படம் அல்ல என பிரபல இயக்குநர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். 


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனைத் தவிர  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர். 






சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மோகன் ஜியின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. 



இந்நிலையில் மோகன் ஜி எடுத்த  திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை பார்த்த பலரும் அவர் மீது சாதிய ரீதியிலான கதைக்களத்தை தேர்வு செய்ததாக விமர்சித்து இருந்தனர். அந்த வகையில் பகாசூரன்  படமும் அப்படித்தான் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் இப்படத்தில் செல்வராகவன் அப்பா கேரக்டரில் நடித்துள்ள தயாரிப்பாளர் கே.ராஜன் படம் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளார். 


அதில் மோகனின் முந்தைய ஒரு படம் குறிப்பிட்ட ஒரு சாதியை சார்ந்து எடுக்கப்பட்டிருக்கலாம். அது அவ்வளவு பெருசாகவும் இல்லை. ஆனால் இந்த படம் சாதி படம் அல்ல...சமுதாய சாடல்...பெண் பிள்ளைகள் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக போராடும் படம் என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார். இந்த வீடியோவை இயக்குநர் மோகன் ஜி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண