தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் 2018ஆம் ஆண்டு மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளத்தை முழுமையாக அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. 


இதையடுத்து, தயாரிப்பாளர் ஞானவேல்ராவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்து என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, அவர் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கோர்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். 


முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த மனுவில், மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததிற்காக பேசப்பட்ட ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே ஞானவேல்ராஜா வழங்கியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மே 2019ல் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.



நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள மனுவில், மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக 15 கோடி ரூபாய் சம்பளத்தை பல்வேறு தவணைகளில் தரவேண்டும் என்று பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.









மீதமுள்ள சம்பள பாக்கியை பெற்றுத் தரக் கோரி ஒரு மனுவும், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மீது ரிட் மனுவும் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ளார். 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய ஆண்டுகளில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து 91 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கினை நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதி சுந்தர் முன்னிலையில் வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண