திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷின் பேச்சு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு நடிகர் விஜய் தேவரகொண்டாவை மறைமுகமாக தாக்குவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். தனது பேச்சில் கணேஷ் கூறிய வார்த்தைகள் விஜய் தேவரகொண்டாவை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த அனுமானத்திற்கு வந்துள்ளார்கள்.
விஜய் தேவரகொண்டாவை விமர்சித்த பந்த்லா கணேஷ்
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ். இவர் சினிமா நிகழ்ச்சிகளில் தனது சர்ச்சைக்குரிய பேச்சால் பரவலாக அறியப்படுகிறார். அந்த வகையில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள கே ராம்ப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் போது அவரது பேச்சு தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கள் நடிகர் விஜய் தேவரகொண்டாவை தாக்கும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் கிரணை புகழ்ந்து பேசிய பந்த்லா கணேஷ் புகழ் ஒரு நடிகனை தலைக்கனம் பிடித்தவராக மாற்றுகிறது என்று கூறினார். " ஒரு படம் ஹிட் ஆனால் புது ஷூ , லூஸான பேண்ட் , தொப்பி நள்ளிரவில் கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு சீன் போட தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் கிரணை நான் பார்க்கும்போது அவர் மிகவும் பணிவுடன் இருக்கிறார். அவர் எனக்கு சிரஞ்சீவியின் ஆரம்ப காலத்தை நினைவுபடுத்துகிறார்" என்று கூறினார்.
சினிமாவை நேர்மையாக நம்பும் யாரும் கைவிடப்பட்டதில்லை. ஆனால் ஒரு படம் ஹிட் ஆனால் எல்லாம் தெரிந்தவர்கள் போல் சில பேசுகிறார்கள்" என்று அவர் தனது பேச்சை முடித்தார்.