ஜெய் பீம் திரைப்படம் வெளியான நாளிலிருந்து பாராட்டுகளை சந்தித்து வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் விமர்சனங்களை சந்திக்கத் தொடங்கியது. அதற்கு காரணம், படத்தில் கதையின் படி வில்லனாக வரும் போலீஸ்காரரின் பெயர் மாற்றம் மட்டும், அவர் வீட்டில் இருந்த வன்னியர் சங்க காலண்டர் தான்.
இந்நிலையில் தான் ஜெய்பீம் தொடர்பான எதிர்ப்பலை கிளம்பி, தற்போது பேரலையாக வீசி வருகிறது. ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்கக் கூடாது மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம் அனுப்பியது. 5 போலீஸ்காரர்களின் துப்பாக்கி பாதுகாப்பிலிருந்து சூர்யா தப்பிவிட முடியாது என்று முறைந்த காடுவெட்டி குருவின் மகன் பேசியது என அடுத்தடுத்து பிரச்சனை வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் இயக்குனர் பாரதிராஜா, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தில் கருத்து சுதந்திரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதலளித்த அன்புமணி, அந்த இடத்தில் தேவர் காலண்டர் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு காட்டமான கேள்விகளை பாரதிராஜாவை நோக்கி எழுப்பியிருந்தார். இந்நிலையில், 2007 ல் வெளியான சூர்யாவின் வேல் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமதித்ததாக, சினிமா தயாரிப்பாளர் ஒருவர், காட்டமான பதிவை போட்டுள்ளார்.
அதில், வேல் படத்தில் வில்லன் வீட்டில் தேவர் படம் இருப்பதாகவும், தேவரை அவமதித்த சூர்யாவின் படங்கள் தியேட்டர் வரவிடமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏஎம் செளத்ரி தேவர் என்ற அந்த தயாரிப்பாளர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். 2007 ல் வெளியான வேல் படத்திற்கு தற்போது அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அவரது பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் இனி எங்கு போய் முடியுமோ...!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்