உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமா மூலம் தான் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். நடிகர் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ராவுக்கு பாலிவுட் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. அதுதான் அவர் நடித்த ஒரே தமிழ் படம் என்றாலும் ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக ஈர்த்தார். 


பாலிவுட் திரையுலகில் உச்சபட்ச நடிகையாக தன்னுடைய அடையாளத்தை நிலை நிறுத்தினார். அதை தொடர்ந்து அவரின் திரைப்பயணம் ஹாலிவுட் படங்களை நோக்கி பயணித்தது. தற்போது ஹாலிவுட் சினிமாவில் தவிர முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார். பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018ம் காதலித்து  திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் குழந்தையுடன் அமெரிக்காவிலேயே செட்டிலாகி விட்டார் பிரியங்கா சோப்ரா.


Priyanka Chopra : கொள்ளைக்காரியாக மாறிய பிரியங்கா சோப்ரா... லீக்கான 'தி பிளஃப்' படத்தின் புகைப்படம் - பரபரப்பான தகவல் இதோ



பிரியங்கா சோப்ரா நடித்த லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை, பர்ஃபி, அந்தாஸ், மேரி கோம் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக  பாராட்டுகளை குவித்தது. மேலும் ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட், தி பிளஃப் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 


அதிரடி ஆக்ஷன் நிறைந்த சாகச படமாக உருவாகி வரும் 'தி பிளாப்' படத்தில் மெர்சல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 19ம் நூற்றாண்டில் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போராடும் ஒரு பெண்ணாக கடல் கொள்ளைக்காரியாக நடித்துள்ளார். இப்படத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


அந்த புகைப்படத்தில் மோஹக் ஹேர்ஸ்டைலுடன் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதை பார்த்த திரை ரசிகர்கள் பிரியங்காவின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள். 


நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட பிரியங்கா சோப்ரா ரிஸ்க் எடுத்து நடிக்கும் அளவுக்கு துணிச்சலான நடிகையாக திகழ்கிறார். இதுவரையில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் சிட்டாடல் இணைய தொடர். அதில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.