இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகியாகவும் வலம் வந்தவர். தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி நடித்த அவர், பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு  அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வந்த அவர் சுமார் 144  கோடி மதிப்பீட்டில், பிரம்மாண்டமான வீடு ஒன்றினையும் வாங்கியுள்ளனர்.  இதனையடுத்து நியூயார்க் நகரில் ப்ரியங்கா சோப்ரா பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றினை தொடங்கிய நிலையில் சோனா என்றும் ரெஸ்டாரண்ட்டிற்கு  பெயரிடப்பட்டது. 


இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. குடும்பம், பிஸினஸ், நடிப்பு என தன் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியங்காவை சுற்றியுள்ளது விவாகரத்து புயல். அதற்கு காரணம் இன்ஸ்டா. இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணவர் பெயரையும் இணைத்து தன்னுடைய கணக்கை வைத்திருந்தார் பிரியங்கா. தற்போது கணவர் பெயரை நீக்கிவிட்டு தன்னுடைய பெயரை மட்டுமே வைத்துள்ளார். இந்த விவகாரம்தான் தற்போது சோஷியல் மீடியா டாக்காக மாறியுள்ளது. விரைவில் பிரியங்கா - நிக் ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாகவும், அதனால் தான் கணவர் பெயரை பிரியங்கா நீக்கியுள்ளதாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் விவகாரத்து செய்வதாக இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமே ஆகும். 




சோஷியல் மீடியாவில் பெயரை நீக்குவதை மட்டுமே வைத்துக்கொண்டு மற்றவர்களின் சொந்த விஷயங்களை இந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்யக் கூடாது என பிரியங்காவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்து வருகின்றன. சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியிலும் பிரியங்காவும், அவரது கணவரும் இணைந்து புகைப்படம் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே இது ஒரு வதந்தி என்றும், இந்த பொய்யான தகவலை யாருமே பரப்ப வேண்டாமென பிரியங்காவின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல பிரியங்காவின் விவகாரத்து தகவல் குறித்து இந்தியா டுடேவுக்கு கருத்து தெரிவித்த அவரது தோழி,  பிரியங்காவின் விவகாரத்து தகவல்கள் வேடிக்கையாக உள்ளது. அவரின் எதிர்கால பணித்திட்டங்களுக்கு ஏற்ப தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார். சோப்ரா என்பதையும் சோஷியல் மீடியாவில் நீக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.