நடிகை பிரியங்கா சோப்ரா மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு திரும்பிய புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


கடந்த 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற  பிரியங்கா சோப்ரா 2002 ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.  2003 ஆம் ஆண்டு தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை என்ற இந்தி படத்தில் அறிமுகமான அவரை தமிழை விட பாலிவுட் அமோகமாக வரவேற்றது. அதே ஆண்டில்  வெளியான ஆண்டாஸ் படம் பிரியங்காவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. 






தொடந்து முஜ்சே ஷாதி கரோகி, க்ரிஷ், பேஷன், பிக் பிரதர்,ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட்டின் அசைக்க முடியாத நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்த பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த பிரபல நடிகரும் , பாப் இசை பாடகருமான நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் மால்தி மேரி என்னும் பெண் குழந்தையும் உள்ளது. 


நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவருமே வெவ்வேறு கலாச்சாரங்களை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அதன் பண்டிகைகளை கொண்டாட தவறுவதே இல்லை. அந்த வகையில் பிரியங்கா தனது கணவர் நிக் ஜோனஸ் மற்றும் மகள் மால்தி மேரியுடன்  தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. 






இதனிடையே கிட்டதட்ட 3 வருடங்களாக இந்தியா பக்கமே வராமல் இருந்த பிரியங்கா சோப்ரா இன்றைய தினம் மும்பை திரும்பியுள்ளார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். மகள் மால்தியும் அவருடன்  வருகை தந்துள்ளதாக சொல்லப்பட்டாலும் விமான நிலையத்தில் பிரியங்கா சோப்ரா மட்டுமே வருகை தந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


அடுத்ததாக பிரியங்கா சோப்ரா நடிப்பில் நடிகர் சாம் ஹியூகனுடன் இணைந்து நடித்த இட்ஸ் ஆல் கம்மிங் பேக் டு மீ என்ற படமும்,அமேசான் ஸ்டுடியோ ஸ்பை தொடரான ​​சிட்டாடலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.