பிரபல பாலிவுட் நடிகை மற்றும் தற்போது ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும் உலக அழகி பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் பயணத்தை குறித்து மனம் திறந்துள்ளார்.


நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரையுலகில் கால்பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பிரபல சேனலின் நேர்காணலில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ‌ பத்து வருட கடின உழைப்புக்கு பின் தற்போது அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிட்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஹாலிவுட்டில் தடம் பதித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது தான் நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ அதை செய்கிறேன். பிரியங்கா சோப்ரா பிரபல சீரிஸ் குவான்டிகோ சீரிஸில் நடித்து இருந்தார். மேலும் பேவாட்ச்சில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். 






அது குறித்து அவர் கூறுகையில், தென்னிந்திய நடிகைகள் ஹாலிவுட் வாய்ப்புக்காக மிகவும் போராட வேண்டி உள்ளது. பெரிய கமர்சியல் படங்களில் முன்னணி கதாபாத்திரத்திற்காக நாம் நிறைய உழைப்பு போட வேண்டி இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தான் எப்போதுமே ஒரு குறிக்கோளை நோக்கி பயணம் செய்யும் ஒரு பெண்மணி என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவில் நிறைய பெரிய ஆளுமைகளுடன் எல்லாம் நான் நடித்துவிட்டேன். அதேபோல் ஹாலிவுட்டிலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.. மேலும் பிரியங்கா ரஷோ பிரதர்ஸ்ஸின் அடுத்த சீரிஸ் சிடாடெலில் நடிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் ஜீ லீ ஜாரா படத்தில் ஆலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா. 


திரைப்படத்தில் தென்னிந்திய நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக சமந்தா தற்காப்பு கலைகள் பெற்றுக் கொண்டே இருப்பதாகவும், அதன் காரணமாகவே அவர் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது விலகி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகிறது.






மேலும் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.