2000 ஆண்டு உலக அழகி போட்டியில் பிரியங்கா சோப்ரா உலக அழகி  பட்டத்தை வென்றார். பட்டம் பெற்ற பிறகு பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமாகி முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான்,அமீர் கான் மற்றும் பலர் ஹீரோக்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவூட் நடிகரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். தமிழில் இளைய தளபதி விஜய் ஜோடியாக 'தமிழன்' திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா சோப்ரா. அதற்கு பின்னர் முழுவதுமாக பாலிவுட்டில் அவரது கவனம் திரும்பியது.  


 


Priyanka Chopra : மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் தில்லுமுல்லு...? - பிரியங்கா சோப்ரா மீது 'மிஸ் பார்படாஸ்' அழகி குற்றச்சாட்டு!


 


மிஸ் பார்படாஸ் குற்றச்சாட்டு :


தற்போது பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் முறைகேடு நடைபெற்றுள்ளது என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் 'மிஸ் பார்படாஸ்' அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி. இருவரும் 2000ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டவர்கள். சமீபத்தில் தான் 2022ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டி நடைபெற்றது. அதில் ஸ்பான்சர்களை முன்வைத்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்ற குற்றைச்சாட்டு எழுந்தது. அதை குறிப்பிட்ட லீலானி மெக்கோனி 2000ம் ஆண்டு உலக போட்டியிலும் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பதை பகிரங்கமாக தனது யூடியூப் வீடியோல் வெளியிட்டுள்ளார். 


 






 


பிரியங்காவின் மிஸ் வேர்ல்ட் 2000 பட்டம்  முறைகேடானது :


2000ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இதை நான் எதிர்நோக்கி அதனை கடந்து சென்றேன். பிரியங்கா சோப்ரா மிஸ் இந்திய பட்டத்தை வென்ற போது ஸ்பான்சராக இருந்த ஜீ டிவி தான் மிஸ் வேர்ல்ட் போட்டிக்கும் ஸ்பான்சராக இருந்தார்கள். இதன் மூலம் பல சலுகைகளை அனுபவித்தார் பிரியங்கா சோப்ரா. உதாரணமாக நீச்சல் உடை, புடவை அணிந்து போட்டோஷூட் செய்ய பிரியங்காவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிரியங்கா தான் மிஸ் வேர்ல்ட் 2000 பட்டத்தை வெல்ல போகிறார் என்ற தகவல் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது என அதிர்ச்சியான தகவலை பகிர்ந்தார் லீலானி மெக்கோனி. இது மட்டுமின்றி பல சலுகைகள் அவருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. எனவே உலக அழகி 2000 பட்டம் பிரியங்கா சோப்ராவிற்கு கிடைத்தது முறைகேடானது என்றுள்ளார் லீலானி மெக்கோனி.