இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகியாகவும் வலம் வந்தவர். தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அறிமுகமாகி நடித்த அவர், பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு  அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வந்த அவர் சுமார் 144  கோடி மதிப்பீட்டில், பிரம்மாண்டமான வீடு ஒன்றினையும் வாங்கியுள்ளனர். இதனையடுத்து நியூயார்க் நகரில் ப்ரியங்கா சோப்ரா பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்றினை தொடங்கிய நிலையில் சோனா என்றும் ரெஸ்டாரண்ட்டிற்கு  பெயரிடப்பட்டது. 




 


இந்தியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. குடும்பம், பிஸினஸ், நடிப்பு என தன் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியானது. அதற்கும் காரணம் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த தனது கணவர் பெயரை நீக்கியதுதான். இது இன்று காலை முதலே சமூகவலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்த பிரியங்காவின் தாயார் இது ஒரு வதந்தி என்றும், இந்த பொய்யான தகவலை யாருமே பரப்ப வேண்டாமென கூறினார்.


பிரியங்காவின் தோழியும் பிரியங்காவின் விவகாரத்து தகவல்கள் வேடிக்கையாக உள்ளது. அவரின் எதிர்கால பணித்திட்டங்களுக்கு ஏற்ப தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் என்று கூறினார். இந்த நிலையில் இந்தத் தகவல் பொய்யானாது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் சிக்கியுள்ளது. அது என்னவென்றால் நேற்று நிக் ஜோனஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டார். இதற்கு பிரியங்கா சோப்ரா கமெண்ட் செய்துள்ளார். அதில் டேம்.. உன் கைகளை பார்த்து நான் இறந்தே போனேன்..” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.