இந்திய திரையுலகின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் உலகம் முழுவதும் பிரபலமான Big Brother நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு புகழ்வாய்ந்த பிரபல நடிகையாக மாறினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர், கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா தனது பெரும்பாலான நேரங்களை வெளிநாட்டிலே தனது கணவருடன் கழித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், வட இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகையான ஹோலி நேற்று உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டினர். நடிகை பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக்ஜோன்ஸ் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக கொண்டாடினர்.
இதுதொடர்பான, புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு மேல் பிரியங்கா சோப்ரா பதிவிட்டிருப்பதாவது, “உலகம் மிகவும் பயமுறுத்தும் ஒரு நேரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியை காண முடியும். அது ஒரு வரம். அனைவருக்கும் இனிய ஹோலி. ஹோலி பண்டிகையை விளையாடிய எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நிக் ஜோனஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மனைவி பிரியங்கா சோப்ராவுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 2002ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2003-ஆம் ஆண்டு முதல் ஏராளமான இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்திய அளவில் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த ஜோடி தங்கள் குழந்தையை வாடகைத் தாய் மூலம் வரவேற்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்