Priya Bhavani Shankar: டோலிவுட்டில் என்ட்ரியாகும் பிரியா பவானி ஷங்கர்.. ஃபேஷன் டிசைனர் கதாபாத்திரமா? - முழு விபரம்!

பிரியா பவானி ஷங்கர், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பெயரிடப்படாத க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் சத்யதேவ் மற்றும் கன்னட நடிகர் டாலி தனஞ்சய் நடிக்கும் படத்தின் முலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

Continues below advertisement

 

Continues below advertisement

ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாக உள்ள இதுவரையில் பெயரிடப்படாத க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் சத்யதேவ் மற்றும் கன்னட நடிகர் டாலி தனஞ்சய் நடிக்கும் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.  ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாலா சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். 

 

 

சிறந்த நடிகருக்கான விருது :

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா: தி ரைஸ் படத்தில் ஜாலி ரெட்டி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் தனஞ்சய் புஷ்பா: தி ரூல் படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பெங்களூரில் பார்லே ஃபிலிம்பேர் விருதுகள் சவுத் 2022 நடைபெற்றது. இந்த விழாவில் "படவா ராஸ்கல்" படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் தனஞ்சய். 

 

 

அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் சத்யதேவ் :
 

நடிகர் சத்யதேவ் சமீபத்தில் வெளியான காட்பாதர் திரைப்படத்தில், விவேக் ஓபராய் நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராம் சேது திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவை தவிர குர்துண்டா சீதகாலம், கிருஷ்ணம்மா மற்றும் ஃபுல் பாட்டில் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தெலுங்கு திரையுலகில் அறிமுகம் :

 

ஒரு கிரிமினல் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகவிருக்கும் இப்படத்தில் சரண் ராஜ் இசையமைக்க, மீராக் வசனங்கள் எழுத அனில் கிரிஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்கள்.  பிரியா பவானி ஷங்கர் இதுவரையில் பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கில் இப்படம் மூலமே அறிமுகமாகிறார். பிரியா பவானி ஷங்கரை படத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதில் பிரியா பவானி ஷங்கர் ஒரு இன்ச் டேப் மற்றும் ஒரு கட்டர் வைத்திருப்பது போல இருப்பதால் அவர் ஒரு பேஷன் டிசைனராக இருக்க கூடும் என கூறப்படுகிறது.  தற்போது நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒளிப்பதிவு செய்கிறார் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. மற்ற நடிகர்கள் குறித்த விவரம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.  

Continues below advertisement
Sponsored Links by Taboola