யானை :


இயக்குநர் ஹரி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் யானை. இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜயும் , ஹீரோயினாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியுள்ள யானை திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.







பிரியா பவானி சங்கர்  வேண்டாம் !


யானை படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் திருநெல்வேலி பெண்ணாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அருண் விஜய்க்குன் ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கலாம்  என லிஸ்ட் எடுத்தபொழுது அதிலிருந்து முதலில் பிரியா பவானி சங்கர் பெயரை அழித்துவிட்டாராம் இயக்குநர் . காரணம் இறுதியாக பிரியா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் மாஃபியா திரைப்படம் வெளியாகியிருந்தது.  அதனால் பிரியா வேண்டாம் என இருந்த இயக்குநர் ஹரி, தனது மனைவி பிரீத்தாவுடன் பிரியா பவானி சங்கரை விமான நிலையத்தில் சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பு நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கரை கதை சொல்வதற்காக அழைத்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வந்த பிறகு ஹரி இயக்கத்தில் நடிப்பேன் என  எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்திருக்கிறார்  பிரியா பவானி சங்கர்.







விக்ரம் படத்தால் தள்ளிப்போன ரிலீஸ் !


யானை திரைப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என டிரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கமல்ஹாசன் நடிப்பில் , லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்து வருவதால் , அந்த படத்துடன் யானையை போட்டி போட வைக்க படக்குழுவினர் தயாராக இல்லை. எனவே யானை படத்தை வருகிற ஜூலை 1 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.