செய்தி வாசிப்பாளர்கள் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்து ஜொலித்தவர்கள் ஏராளம். அந்த வகையில் ஒரு பிரபலமான செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். 



செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் மூலம் சினிமா வாய்ப்பும் அவரை தேடி வந்தது. 2017ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் பிரியா பவானி ஷங்கர்.


மெல்ல மெல்ல கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, மாஃபியா, திருச்சிற்றம்பலம், யானை, அகிலன், ருத்ரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் படங்களில் நடித்த பிரியா பவானி ஷங்கருக்கு தெலுங்கு திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்தன. தற்போது ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




சமீபத்தில் பிரியா பவானி ஷங்கர் அவரின் நீண்ட கால நண்பரும் காதலருமான ராஜவேல் என்பவற்றின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். 18 வயது முதல் அவரை காதலித்து வருவதாகவும் தெரிவித்து அவருடன் அவுட்டிங் சென்ற போது எடுத்த ஏராளமான புகைப்படங்களை பகிர்ந்து அவரின் ரசிகர்களை பொறாமை பட வைத்து வந்தார். 






 


அந்த வகையில் பிரியா பவானி ஷங்கர் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் 'திருவிளையாடல்' படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். சிவபெருமான் தன்னுடைய இரு மகன்களில் மூத்த மகனான விநாயகருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கோவித்து கொண்ட இளைய மகன் அவர்களிடம் இருந்து பிரிந்து செல்கிறார். இந்த காட்சியை பகிர்ந்து முருகனாகவே இருந்தாலும் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைமை தான். அப்படி நீங்களும் இரண்டாவது குழந்தையாக இருந்து இது போன்ற அனுபவங்கள் இருத்தலால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர். 'என்னுடைய ஒட்டுமொத்த குழந்தை பருவத்தையும் நான் முருக கடவுளுடன் ஒப்பிட்டு பார்ப்பேன் என நினைத்து கூட பார்த்தது கிடையாது' என்ற கேப்ஷனுடன் வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். 


பிரியா பவானி ஷங்கரின் இந்த போஸ்ட் பார்த்து அவரின் ரசிகர்கள் தங்கள் குழந்தைப்பருவ நினைவுகளைப் பகிர்ந்து உள்ளனர்.