கோலிவுட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து , நடிகையாக மாறியவர்களுள் பிரியா பவானி சங்கரும் ஒருவர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், மாஃபியா என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான பிளட் மணி என்னும் வெப் தொடரிலும் நடித்திருந்தா பிரியா பவானி சங்கர். தற்போது மலையாள நடிகை பார்வதி மற்றும் நாக சைத்தன்யாவுடன் இணைந்து மற்றுமொரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப் தொடரை யாவரும் நலம் , 24 உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







இந்நிலையில் பிரியா பவானி சங்கரின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.  எப்போதுமே ஹோம்லி கேர்ளாக பார்த்து பழகிய பிரியா பவானி சங்கரை இடை தெரியும் உடை அணிந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலும் , புகைப்படங்களுக்கு கீழே ஷாக்கிங் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். குறிப்பாக “என்ன சிம்ரன் இதெல்லாம் “ என்னும்  கமெண்டுகளை புகைப்படத்திற்கு கீழே அதிகமாக பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் “நீயுமா இப்படி இறங்கிட்ட “ என பதிவிட்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் பலர் அந்த  புகைப்படங்களை ரசிக்க தவறவில்லை. ஒரே ஹார்ட் அண்ட் ஃபயர் எமோஜிகளை பறக்க விட்டிருக்கின்றனர்







நடிகைகள் சமீப காலமாகவே முன்னணி நடிகைகளும் கூட  சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த சூழலில் பிரியா இடை தெரியும்படியாக பதிவிட்ட புகைப்படத்திற்கு அவர்களது ரசிகர்கள் இவ்வளவு ஷாக்காவது நமக்கே ஷாக்கிங்காத்தான் இருக்கிறது.