அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் ராணுவ வீரர்களாக நடிக்கும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் அதிரடி டீஸர் வெளியாகி உள்ளது.


இந்த ஜனவரியில் ரசிகர்கள் பலரும் படே மியான் சோட் மியான் (Bade Miyan Chote Miyan) படத்தின் டீஸரை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். படத்தின் கவர்ச்சியான போஸ்டர்கள் மற்றும் கிலிம்ப்ஸை தொடர்ந்து தற்போது படக்குழு டீசரை நேற்று வெளியிட்டுள்ளனர்.  அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு அதிரடி ஹீரோக்கள் நடித்துள்ளனர்.


இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படமான இந்த படத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதல் முறையாக ஒன்றாக நடித்துள்ளனர்.  வசீகரிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் தேசபக்தி உணர்வுடன் கூடிய இந்த டீஸர் ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தை உருவாக்கியுள்ளது.மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சினிமா காட்சிகளை கொண்டுள்ளது.


இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் மற்றும் அலயா எஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈத் 2024 அன்று படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த படத்தின் டீஸரைப் பற்றி இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் பேசுகையில், "உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகவும் திறமையான குழுவினரைக் கொண்டு பல நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை படே மியான் சோட் மியான் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.  அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் சவாலான காட்சிகளை மிகவும் சிரமமின்றி நடித்துள்ளனர்.  ஈத் ஏப்ரல் 2024 அன்று இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக பெரிய திரைகளில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.



படம் குறித்து தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறுகையில், "டீஸர் ஒரு உண்மை கதையை பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் மற்றும் டைகர் ஷ்ராஃப் ஆகியோரை வைத்து சொல்லப்பட்டுள்ளது.  கூடுதலாக, பிருத்விராஜ் ஒரு ஆச்சரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தகைய ஆக்‌ஷன் ஹீரோக்களை எங்கள் படத்தில் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அலியின் மேஜிக் மீண்டும் ஒருமுறை நன்றாக வந்துள்ளது.  ரசிகர்கள் எங்கள் குழுவின் அர்ப்பணிப்பையும், இந்த படத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளையும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.


படே மியான் சோட் மியான் படத்தின் டீஸர் படம் என்ன கதையை சொல்ல வருகிறது என்பதை புரிய வைக்கிறது, ஆனாலும் படத்தில் இன்னும் நிறைய ஆக்சன், காமெடி, பாடல்கள் மற்றும் தேச பக்தி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.  வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை ஆஸ் படங்களுடன் இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.