மலையாள திரையுலகின் முன்னனி நடிகர்களில் ஒருவரான, நடிகர் பிரித்விராஜ் பகிரங்கமான மன்னிப்பு கடிதத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்யிட்டுள்ளார். அதற்கான காரணம் இது தான்.
நடிகர் பிரித்விராஜ் நடித்து இந்த பக்ரித் விடுமுறைக்காக வெளியான படம் கடுவா. இப்படத்தில் நடிகர் பிரித்வி ராஜ் மற்றும் விவேக் ஓப்ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர், ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். படம் வெளியாகி மக்கள் மத்தியில், பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மேலும், இதுவரை 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், ஜனரன்ஜகமான இப்படத்தில் வந்த ஒரு வசனம் பெரும் சர்ச்சையினையும் படத்தினைப் பற்றி எதிர்மறையான கருத்துகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
இப்படத்தின், ஒரு காட்சியில் மாற்றுத்திறானாளி குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறானாளி குழந்தைகளின் பெற்றோர்களைப் பற்றி தரக்குறைவான வசனம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து ஒரு தரப்பினர் படத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த வசனத்தை நீக்கக்கோரி கேரள குழந்தைகள் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், இப்ப்டத்தின நடிகர் பிரித்விராஜ் மற்றும் படக்குழு ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், நடிகர் பிரித்விராஜ். மலையாளத்தில் உள்ள அந்த அறிக்கையில்,
குறிப்பிட்ட அந்த வசனத்தினை திரைக்கதை எழுத்தாளர் "வில்லனின் கொடுமை" மற்றும் அவரது செயல்களை மனதில் வைத்து மட்டுமே எழுதினார் என்றும் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உணர்ச்சியின் வெளிப்பாட்டை மட்டும் காட்டுவதற்காகவே இந்த டயலாக் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்கள்.
அந்த அறிக்கையில், "உலகின் மிகவும் விலைமதிப்பற்ற பொருளான" சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோரை படத்தின் வசனம் காயப்படுத்தியதாக கடுவா குழு ஒப்புக்கொள்கிறது. எங்களை "மன்னிக்கவும். இது தவறு தான். நாங்கள் எங்கள் தவறினை ஒப்புக்கொள்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்