தமிழ் சினிமா உலகத்தை பொறுத்தவரை, வார வாரம் வரும் வெள்ளிக்கிழமை அன்று நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை இருந்தது. கொரோனா லாக்-டவுனிற்கு பிறகு, அனைத்தும் முடங்கியது. ஓடிடி யில் வெப் -சீரீஸ்களும் திரைப்படங்களும் வெளியாக தொடங்கியது. குறைந்த கட்டணத்தில் பல படங்களை மக்கள் வீட்டில் இருந்த படியே பார்த்து ரசித்தனர்.
இப்போது, பழைய சூழ்நிலை திரும்பி வர, வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகவிட்டாலும் ஒரு படமாவது ரீலீஸ் ஆகிவிடுகிறது. அந்த வகையில், இந்த வருடத்தின் தீபாவளியையொட்டி, கார்த்தியின் ”சர்தார்” படமும் சிவகார்த்திகேயனின் ”பிரின்ஸ்” படமும் வெளியாகவுள்ளது. இப்படம் தீபாவளியன்று அதாவது 24 ஆம் தேதி வெளியாவதற்கு பதில், வார இறுதிநாளான 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இது போல், முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த ”ஹீரோ” படமும் கார்த்தி நடித்த ”தம்பி”படமும் ஒரே நாளில் ரிலீஸாகி முட்டிக்கொண்டது. இருபடங்களும் வசூல் ரீதியாக பெரிய அளவில் எந்த சாதனையையும் புரியவில்லை. ஆனால், ”ஹீரோ” படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ”ஹீரோ” படத்தை இயக்கிய பி.எஸ் மித்ரன், ”சர்தார்” படத்தை இயக்கியுள்ளார். இம்முறை பண்டிகையையொட்டி வெளியாகும் இப்படங்களில் எப்படம் பெரும் வெற்றியை எட்டும் என்ற கேள்வியும், படத்தை பார்த்து தீபாவளி பண்டிகையை கொண்டாடும் ஆர்வமும் மக்களிடையே உள்ளது. இப்படங்கள் வெளியானலும் அஜித் விஜய் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்ற வருத்தமும் நிலவிவருகிறது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil Salary: ‛அடேங்கப்பா... இவ்வளவு சம்பளமா?’ பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பள லிஸ்ட் இதோ!