தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பேவரைட் நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.பல டப்பிங் தெலுங்கு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் இந்த பிரின்ஸ் திரைப்படம் தான் நேரடியாக அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்து இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார் சிவகார்த்திகேயன். தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது நேரடியாக டோலிவுட்டில் பிரின்ஸ் திரைப்படம் மூலம் நுழைவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது.




தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப்  இயக்கத்தில்  தயாராகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.பேமிலி எண்டெர்டெயினராக உள்ள இப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நாடு, ஹைதராபாத்  மற்றும் பாண்டிச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


புதிய அப்டேட் :


இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தமன் காம்போ இதுவே முதல்முறை. இதனால் இருவரின் ரசிகர்களும் மிக்க ஆவலுடன் இந்த படத்தின் முதல் சிங்கிளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து இந்த படமும் வசூலில் ரூ.100 கோடியை எட்டியதால் ரசிகர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படம் "மாவீரன்". இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியுள்ளது. இப்படத்தில் மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அயலான்.சயின்ஸ் பிக்‌ஷன் படமாக இது உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண