கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி:
பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. இவரும் இசையமைப்பாளர் தான். நடிகராகவும், பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் உள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி என்பதே சினிமாவில் இவருக்கு இப்போது உள்ள அடையாளம். அஜித் நடித்த மங்காத்தா, கோட், சரோஜா, சென்னை 600028, மாநாடு ஆகிய மாஸ் படங்களில் நடித்துள்ளார்.
பிரேம்ஜி - இந்து திருமணம்:
45 வயது வரை முரட்டு சிங்கிளாகவே இருந்த பிரேம்ஜிக்கும், சேலத்தைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருத்தனி முருகன் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜி மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். எப்போதும் கிச்சனில் நேரத்தை செலவிடும் வீடியோ அவர்களது ரீல்ஸில் இடம் பெற்றது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில் இதுவரையில் மனைவியுடன் தம்பி பிரேம்ஜியுடன் பேசுவதில்லையாம். பிரேம்ஜி எவ்வளவோ பேச முயற்சி செய்தாலும் அவர் கண்டு கொள்வதில்லையாம்.
இந்து கூறிய தகவல்:
இது குறித்து பிரேம்ஜியின் மனைவி இந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னோட கல்யாண ஆல்பம் போட்டோல அம்மா, அப்பா, தாத்தா மற்றும் பாட்டி போட்டோக்களை எடிட் செய்து சேர்த்திருக்கிறோம். இந்த போட்டோவில் என்னுடைய தம்பி மட்டும் இல்ல. அவன் கல்யாணத்துக்கு கூட வரவில்லை. என்னுடைய கணவரை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் அவர் பேச முயற்சி செய்தார். ஆனால் அவன் பேசவில்லை. இப்போது தான் காலேஜ் படிச்சு முடித்திருக்கிறான். அவனுக்கு புரிந்துகொள்ளும் வயது இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். எப்போது அவனுக்கு புரியுதோ அப்போது அவன் வரட்டும் என்று விட்டுவிட்டோம். இப்போது வரையில் அவன் என்னிடம் கூட பேசுறது இல்லை என்று கூறியுள்ளார்.