பிரேம்ஜி


இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பிரேம்ஜி (Premji). தனது அண்ணன் வெங்கட் பிரபு திருமணம் செய்துகொண்ட பிறகு பல வருடங்களாக சிங்கிளாக வலம் வந்தார். 45 வயதாகியும் இன்னும் ஏன் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என ரசிகர்களே ஃபீன் பண்ணும் அளவிற்கு தனியாக இருந்து விட்டார். இப்படியான நிலையில் தான் பிரேம்ஜியின் திருமணத் தகவல் வெளியானது,. வங்கியில் வேலை பார்த்து வந்த இந்து என்பவருக்கும் பிரேம்ஜிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருத்தணியில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமண நிகழ்வில் சென்னை 28 படத்தில் நடித்த பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். பிரேம்ஜி இந்து திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.






எப்படி இருந்த பிரேம்ஜி இப்படி ஆகிட்டார்!






திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தனது குடும்ப வாழ்க்கையை சமூக வலைதளத்தில் அப்டேட் செய்யத் தொடங்கிவிட்டார் பிரேம்ஜி. அந்த வகையில் பிரேம்ஜி சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரேம்ஜியின் மனைவி இந்து இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


முத்து படத்தில் ரஜினிக்கு வரும் “அவரு யாருனு உனக்கு தெரியுமா. ஒருகாலத்துல அவர் எப்படி வாழ்ந்தாருனு உனக்கு தெரியுமா?” என்கிற வசனம் பின்னால் ஓட, மசாலா அரைத்து சமையல் செய்கிறார் பிரேம்ஜி. கல்யாணமே செய்துகொள்ள மாட்டேன் என்றிருந்த பிரேம்ஜி, இப்போது இப்படி டோட்டல் ஹஸ்பண்ட் மெட்டிரீயலாக மாறியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளது.  பிரேம்ஜி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள  தி கோட் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.