பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஸிந்தா தனது நீண்டநாள் காதலரான ஜின் குட்டினஃபை 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. நீண்ட நாட்களாக பல்வேறு காதலில் கிசுகிசுக்கப்பட்ட ப்ரீத்தி சத்தமே இல்லாமல் தன் காதலரை கரம் பிடித்து பாலிவுட் உலகுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு ப்ரீத்தி - ஜின் குட்டினஃபை தம்பதிக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான தகவலை ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். ஒரு அழகான விஷயத்தை நான் உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள உள்ளேன். எனக்கும் என் அன்பான கணவருக்கும் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஜெய் ஸிந்தா குட்டினஃப், ஜியா ஸிந்தா குட்டினஃப் எங்கள் குடும்பத்தில் இணைகிறார்கள். எங்களது புது வாழ்க்கை குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். டாக்டர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்