’நெஞ்சினிலே நெஞ்சினிலே.... ஊஞ்சலே’ என அனைவரையும் கன்னத்துக் குழியில் ஊசலாட வைத்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா. நடிகர் ஷாருக்கான் உடன் நடித்த ’தில்சே’ தமிழில் ’உயிரே’ படம் மூலம் கவனமீர்த்த ப்ரீத்தி ஜிந்தா பாலிவுட்டில் அறிமுகமானபோது ’ஹிமாச்சல் ஆப்பிள்’ என வர்ணிக்கப்பட்டார்.


பாலிவுட்டில் ‘தில் சாத்தா ஹே’, ‘கல் ஹோ நா ஹோ’, ‘சோல்ஜர்’, ‘கோய்… மில் கயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்த பிரீத்தி ஜிந்தா, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். 


 



2016ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான அமெரிக்காவை சேர்ந்த ஜீன் குட்எனஃப் என்பவரை திருமணம் செய்துகொண்ட ப்ரீத்தி ஜிந்தா கடந்த ஏழு ஆண்டுகளாக மகிழ்ச்சியான திருமண வாழ்வில் திளைத்து வருகிறார். இந்நிலையில், தங்களது  7ஆவது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தங்களது திருமண நாளான இன்று அழகிய வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். " ஹாப்பி ஆனிவர்சரி மை லவ், எங்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகின்றன என்பதை நம்ப முடியவில்லை. இது போல நிறைந்த மகிழ்ச்சி மற்றும் சிறந்த நினைவுகளுடன் இன்னும் பல ஆண்டுகள் கொண்டாடவேண்டும்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  


 






2021ஆம் ஆண்டு ப்ரீத்தி ஜிந்தா - ஜீன் குட்எனஃப் தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு ஜெய் மற்றும் கியா எனப் பெயரிட்டனர்.


ஐபிஎல் பஞ்சாப் அணியின் ஓனராக விளங்கிவரும் ப்ரீத்தி ஜிந்தா அவ்வப்போது சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் மும்பைக்கு இடையே பிசியாக பயணம் மேற்கொண்டு  வருகிறார்.


இன்ஸ்டாவில் தொடர்ந்து ஆக்டிவாக புகைப்படங்கள் பகிர்ந்து வரும் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு அவரது ரசிகர்கள் இன்று திருமண நாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Watch Poorna BabyShower: கேரள முறைப்படி வேட்டி கட்டி வளைகாப்பு... நிறைமாத கர்ப்பிணியாக இதயங்களை அள்ளும் பூர்ணா!