உலக நாயகன் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்து அசத்தியிருந்த படம்தான் 'மைக்கேல் மதன காமராஜன்’. 1990 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தோன்றிய பீம்பாய் கதாப்பாத்திரத்தை படம் பார்த்தவர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். இந்த கதாப்பத்திரத்தில் நடித்தவர் பிரவீர் குமார். நடிகர், விளையாட்டு வீரர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட பிரவீன் குமார், உடல்நலம் பாதிப்பு காரணமாக இன்று காலமானார்.  அவருக்கு வயது 74. அவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.


டெல்லியில் வசித்து வந்த பிரவீன் குமார், மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.சினிமாவில் நடிப்பதற்கு முன்பு விளையாட்டு வீரராக இருந்தவர். சம்மட்டி மற்றும் வட்டு எறிதல் வீரராக இருந்த அவர், ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, 1968 மற்றும் 1972 ஒலிம்பிக் விளையாட்டு தொடரிலும் பங்கேற்றிருக்கிறார். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும் ‘அர்ஜூனா விருது’ வென்றவர்.






விளையாட்டில் சாதித்த அவர், அடுத்து சினிமாவிலும் மறக்க முடியாத கதாப்பாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். 1988 முதல் 1990 வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தில் ’பீம்’ கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர், தமிழில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ‘பீம்பாயாக’ நடித்திருப்பார். சினிமாவை அடுத்து அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து டெல்லி சட்டசபை தேர்த்லில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் பாஜகவில் இணைந்தார். 


பிரவீன் குமாரின் மறைவுக்கு விளையாட்டு, சினிமா துறை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண