பிரபல நடிகர் பிரதிக் காந்தி முழுநேர நடிப்புக்காக தனது வேலையை விட்ட கதையை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Aa Paar Ke Pele Paar என்ற குஜராத்தி நாடகத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரதிக் காந்தி. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2020 ஆம் ஆண்டு வெளியான ஸ்கேம் 1992 படத்தில் ஹர்ஷத் மேத்தாவாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். இவரைப் பற்றி தெரியாதவர்கள் கூட மீம்ஸ்களில் இதனை பார்த்திருக்கலாம். 2005 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் இவர் ரிலையன்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நடிப்புக்காக வேலையை விடாமல் 2016 ஆம் ஆண்டு வரை இரண்டையும் கையாண்டு வந்த அவர் அதன்பின் முழு நேர நடிகரானார். இதனிடையே இதுதொடர்பான சம்பவங்களை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் நான் 2016 ஆம் ஆண்டு எனது ராஜினாமா செய்தபோது எனது சம்பள பேக்கேஜ் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஆகும். ஆனால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது என்பதால் அதைப் பற்றி யோசிக்காமல் வேலையை விட்டுவிட்டேன்.என்னிடம் சிறிது சேமிப்பு இருந்த நிலையில் அதற்கு சில காலம் முன்பு தான் நான் ரூ.65 லட்சம் கடனில் கண்டிவாலியில் ஒரு வீட்டை வாங்கியிருந்தேன்.
அதேசமயம் என் அப்பாவின் புற்றுநோய் சிகிச்சையும் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்கும் வீட்டில் ஒரு குழந்தை இருந்த நிலையில் எப்படியாவது நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்தேன். உண்மையிலேயே அங்கிருந்து தொடங்கிய பயணம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் 8 குஜராத்தி படங்களை இயக்கினேன். சமீபத்தில் பிரதிக் காந்தியின் திரைப்படமான அதிதி பூதோ பவ செப்டம்பர் 25 ஆம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.