தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவரின் மகன் பிரஷாந்த்துக்கு பல பட வாய்ப்புகள் வந்த போதும் அதை அனைத்தையும் தட்டிக்கழித்து வந்தார். இருப்பினும் தொடர் வற்புறுத்தலால் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க சம்மதம் தெரிவித்த பிரஷாந்துக்கு அதுவே வாழ்க்கையாக மாறிப்போனது. 


 


அடுத்தடுத்த வெற்றி :



1990ம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே வெற்றிப் படமாக அமைய தமிழ் சினிமா பிரசாந்தை கெட்டியாக பிடித்து கொண்டது. பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தை தொடர்ந்து ஆணழகன், எங்க தம்பி, திருடா திருடா, செந்தமிழ் செல்வன் என தொடர் ஹிட் படங்களால் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டார். 


 



 


ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், லட்சுமி, நாசர், எஸ்.வி. சேகர், செந்தில், ராஜுசுந்தரம், ராதிகா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான 'ஜீன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக பிரஷாந்த் அந்தஸ்தை பன் மடங்கு உயர்த்தியது. அதை தெடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் வேறு லெவல் ஹிட் அடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். 


 


சினிமாவில் ரீ என்ட்ரி :



தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகராக இருந்த பிரஷாந்த் ஒரு சில காலங்களுக்கு பின்னர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்ததால் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்ததூன்' திரைப்படத்தில் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க நினைத்தார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் அப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. 


 


இந்த இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பிரஷாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட நடிகர் பிரஷாந்த் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நல்ல  ஒரு ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். சினிமாவில் அவரின் மறுபிரவேசம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


 



 


இரண்டாவது திருமணம் :



மீண்டும் சினிமாவில் அவர் கவனம் செலுத்தி வரும் இந்த வேளையில் பிரஷாந்த் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 2005ம் ஆண்டு கிரகலட்சமி  என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதுவரையில் இரண்டாவது திருமணம் குறித்த எண்ணமே இல்லாமல் இருந்து வந்தார் நடிகர் பிரஷாந்த். 


ஒரு வேளை காதல் திருமணம் செய்து இருந்தால் பிரஷாந்த் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்குமோ என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். அந்தகன் திரைப்படம் வெளியான அடுத்த மாதமே பிரஷாந்துக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் சொன்னதாக கூறப்படும் இந்த தகவல் பிரஷாந்த் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக இருக்கிறது என்றாலும் அவர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர். ஆனால் சோசியல் மீடியா எங்கும் மிகவும் வைரலாக  பரவும் இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இது வரையில் வெளியாகவில்லை.