சூர்யா, கார்த்தியுடன் நடித்த பிரபல நடிகை ப்ரணிதா சுபாஷூக்கும் தொழிலதிபர் நிதின் ராஜுவிற்கும் கடந்த ஆண்டு பெங்களுருவில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், நடிகை ப்ரணிதா சுபாஷூக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 






மேலும் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. 






அதிர்ஷ்டவசமாக டாக்டர் சுனில் ஈஸ்வர் மற்றும் அவரது குழுவினர் ஆஸ்டர் ஆர்வியில் இருந்ததால் எனது பிரசவம் சீராக இருந்தது. மேலும் இந்த செயல்முறையை முடிந்தவரை குறைவான வலியுடன் இருப்பதை உறுதி செய்த டாக்டர் சுப்பு, எங்கள் மயக்க மருந்து நிபுணர் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
நான் மீண்டும் பிறந்த கதையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள என்னால் காத்திருக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண