Pradeep Ranganathan: பிரதீப் நடிக்க வந்ததுக்கு காலேஜ்ல நடந்த இந்த சம்பவம் தான் காரணமா? முதல் முறையாக கூறிய தகவல்!

எதற்காக நடிக்க வந்தேன் என்பதற்கான காரணத்தை டிராகன் பட நடிகர், பிரதீப் ரங்கநாதன் முதல் முறையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படுவது பிரதீப் ரங்கநாதன் என்ற ஒரு நடிகர் தான். ஆளு பார்க்க வெடவெடன்னு தனுஷின் ஜெராக்ஸ் போல இருந்தாலும், படத்தை சூஸ் பண்ணி நடிக்கிறதுல கில்லினு நிரூபிச்சிட்டாரு.

Continues below advertisement

இவர் இயக்கி நடிச்ச, 'லவ் டுடே' படமும் ஹிட்டு, இதை தொடர்ந்து இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்துல சமீபத்துல வெளியான 'ட்ராகன்' படமும் ஹிட்டோ ஹிட்டு. நடித்த 2 படத்தையும் ஹிட் கொடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், தயாரிப்பாளாருக்கு 100 கோடி லாபம் கொடுப்பது எல்லாம் சாதாரண விஷமில்லை. அப்படியொரு சாதனையை எளிதாக செய்திருக்கிறார்.


பெரிய பட்ஜெட்டில் நடித்து படத்தை ஹிட் கொடுக்க மாஸ் ஹீரோக்கள் தவித்து வரும் நிலையில் குறைவான பட்ஜெட்டில் அதுவும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே என்ற படத்தை ஹிட் கொடுத்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கொடுத்திருந்தார் என்றால் அது மிகப்பெரிய விஷயமல்லவா. இவர் மீது தயாரிப்பாளருக்கு நம்பிக்கையை வரவைத்து, இவர் ஜெயம் ரவியை வைத்து முதலில் இயக்கிய கோமாளி படம் தான். 

அதன் பிறகு ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான படம் தான் லவ் டுடே.
இந்தப் படத்தில் பிரதீப் உடன் இணைந்து நடிக்க பல ஹீரோயின்கள் நோ சொன்ன நிலையில், கடைசியாக  இவானா ஓகே சொல்லி இருந்தார். மேலும் சத்யராஜ், யோகி பாபு, ராதிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் கதையும், எடுக்கப்பட்ட விதமும் தான். படத்திற்கு தயாரிப்பு நிறுவனமும் பாராட்டு தெரிவித்தது.


இந்தப் படத்திற்கு பிறகு திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் தான் டிராகன். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 21 ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பக்கா இளசுகளுக்கான ஒரு வைப் மூவி என்றாலும் இதில், சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு அல்டிமென்ட். இந்த படத்தையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்தப் படத்தில், பிரதீப் உடன் இணைந்து மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். டிராகன் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது. ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் ஏற்கனவே தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்றுக் கொடுத்துவிட்டது.

மேலும், பிரதீப் மீது தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அதிகளவில் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து ஒரு படங்களுக்கு தயாரிக்க இருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான், பிரதீப் ரங்கநாதன் எதற்காக நடிக்க வந்தேன்? என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். 


கல்லூரி காலத்தில், தனது ஷார்ட்பிலிமில் மணி என்ற ஒருவர் நடித்திருந்தார். அந்த குறும்படம் கல்லூரியிலும் ஹிட் கொடுத்தது. இதன் காரணமாக அந்த குறும்படத்தில் நடித்த மணிக்கு பாராட்டு குவிந்தது. அதிலும் பெண்கள் அனைவரும் மணிக்கு பாராட்டு தெரிவித்தார்கள். அப்போது நான் அவருக்கு பக்கத்தில் தான் இருந்தேன். என்னை யாருமே கண்டு கொள்ளவில்லை. அப்போதுதான் ஒரு நடிகருக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. 

சமையல் மற்றொன்று சினிமா. இந்த 2 துறையிலும் அங்கீகாரம் விரைவில் கிடைத்துவிடும். ஆனால், அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். அப்படி நான் கடினமாக உழைக்கவே எனக்கு இப்போது அந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஒரு நடிகராக இருக்க பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 

Continues below advertisement