பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ட்யூட் படம் ஓடிடியில் வெளியாவது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
ட்யூட் படம்
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, டிராவிட் செல்வம், ரோகிணி, சரத்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “ட்யூட்”. சாய் அபயங்கர் இசையமைத்திருந்த இப்படம் கடந்த அக்டோபர் 17ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஏற்கனவே லவ் டுடே, டிராகன் படங்களின் மூலம் அதிகம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதனின் இந்த படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ரூ.100 கோடி வசூல்
இதனிடையே படம் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக 2கே கிட்ஸ்கள் ட்யூட் படத்தை கொண்டாடி தீர்த்தனர். தீபாவளிக்கு பைசன், டீசல் ஆகிய படங்கள் வெளியானாலும் ட்யூட் படம் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக மாறியது. இதனால் இந்த படம் ரூ.100 கோடி வசூலை அள்ளியது. கோமாளி படம் மூலம் இயக்குநராக தன்னை நிலை நிறுத்திய பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக தன்னை மெருகேற்றிக் கொண்டார். அதேசமயம் ஹீரோயின் மமிதா பைஜூ, முக்கிய கேரக்டரில் நடித்த சரத்குமார், டிராவிட் செல்வம் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
இதனிடையே ட்யூட் படத்தின் கதைக்களம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. ஒரு பக்கம் கலாச்சார சீரழிவு என சொல்லப்பட்டாலும், மற்றொரு பக்கம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசியதால் பாராட்டையும் பெற்றது. காதல் செய்த பெண்ணுக்காக ஒரு நபர் செய்யும் அதீத தியாகம் என பலரும் இப்படத்தை கிண்டல் செய்தனர். படத்தில் இடம் பெற்ற கருத்த மச்சான் பாடல் வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது. பலரும் இந்த காட்சியை ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
இதனாலேயே இப்படம் அதிக மக்களால் பார்க்கப்பட கூடிய காரணமாகவும் அமைந்தது. இந்த நிலையில் ட்யூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை மிகுந்த விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்ற நிலையில் படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடலாம் என்ற முறையில் நவம்பர் 14ம் தேதி ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப்படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.