Continues below advertisement

ஒரு சில படங்களில் நடித்து அந்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தவர் பிரதீப் ரங்கநாதன். இதற்கு முன்னர் தனது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல கலெக்சனை பெற்ற சூழலில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கவலையை நண்பர்களிடம் வெளிப்படுத்தி வருகிறாராம் பிரதீப் ரங்கநாதன்.

உச்சத்தில் இருக்கும் பிரதீப் ரங்கநாதன்:

கடந்த 2019 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்தார். அதாவது  கோமாளி திரைப்படம் உலக அளவில் 55.2 கோடி ரூபாய் வசூலித்தது. 

Continues below advertisement

அதேபோல், கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான லவ் டுடோ திரைப்படத்தை தானே இயக்கி அந்த படத்தில் நடிகராகவும் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படமும் 90.75 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டிராகன்  உலக அளவில் 153. 83 கோடி ரூபாயை வசூலித்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கூட செய்ய முடியாத சாதனையை செய்தார்.

அடுத்து என்ன நடக்கும் என்ற கவலை:

இப்படி தன்னுடைய அனைத்து படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து வெளியாக உள்ள டூட் மற்றும் எல்.ஐ.கே  திரைப்படம் ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பை பெறும் என்றும் இது வசூல் சாதனை செய்யாவிட்டால் என்ன செய்வது என்ற கவலையை தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் பிரதீப் ரங்க நாதன் வெளிப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.