பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடித்துள்ள டியூட் படம் 5 நாட்களில் ரூ 95 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் டியூட் படத்தி வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் ரசிகர்களிடம் கலகலப்பாக பேசி உரையாடினார்.
டியூட் வெற்றிவிழாவில் சரத்குமார் கலகலப் பேச்சு
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான ‘டியூட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி வாகை சூடி வருகிறது. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை சாய் அப்யங்கர் செய்துள்ளார்.
கமர்ஷியல் கூறுகள் நிறைந்த படமாக இருந்தாலும், சாதி மறுப்பு திருமணம் மற்றும் ஆணவக் கொலை போன்ற சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளைக் கதைக்குள் திறம்பட நயமாக இணைத்திருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தீவிரமான அரசியல் கருத்தை வணிகரீதியாகச் சொல்லும் இயக்குனர் கீர்த்திஸ்வரனின் திறமைக்கு விமர்சகர்களும் பார்வையாளர்களும் பாராட்டுகள் வழங்கி வருகின்றனர்.
தமிழ் ரசிகர்களுடன் சேர்ந்து தெலுங்கு பார்வையாளர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நாட்களிலேயே ‘டியூட்’ திரைப்படம் ரூ.95 கோடி வசூல் செய்து, இவ்வாண்டின் மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்றாக திகழ்கிறது.
தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடிக்க ஆசை
டியூட் படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சரத்குமார் " இந்த படத்திற்கு பின் பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் என்னையும் டியூட் என்று அழைக்கிறார்கள். நானும் இப்போது டியூட் ஆக மாறிவிட்டேன். அடுத்த படத்தில் தீபிகா படுகோனை நாயகியாக வைத்து அவருக்கு ஜோடியாக என்னை நடிக்கவைத்து ஒரு டுயட் பாடல் வைத்தாலும் எனக்கு ஓக்கே தான். இந்த மாதிரியான படத்தில் நடிக்க முடியும் என்றால் நிச்சயம் தீபிகாவுக்கு ஜோடியாக என்னால் நடிக்க முடியும் . ஏனால் நான் ஐஸ்வர்யா ராய்க்கு கணவனாகவே நடித்துவிட்டேன். இந்த மாதிரியான மேடையில் தான் இதை கேட்க முடியும்." என சரத்குமார் கலகலப்பாக பேசினார்