'லவ் டுடே' படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் தான் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். மேலும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ரவி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.5.5 கோடி. முழுக்க முழுக்க காதலையும், காதல் ஜோடிகள் தங்களது செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
சிறிய பட்ஜெட்டில் வெளியான இந்தப் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்தது. மாஸான வரவேற்பு பெற்ற இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு லவ் யப்பா என்கிற பெயரில் வெளியான நிலையில், மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' படம் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், ஜார்ஜ் மரியன், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் பிப்ரவரி 21 ஆம் தேதி இன்று வெளியான படம் தான் டிராகன். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டி வருகிறார் பிரதீப். லவ் டுடே படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த பிரதீப் இன்று டிராகன் படம் மூலமாக மீண்டும் மீண்டும் வரவேற்பு பெற்று வருகிறார். பள்ளியில் நன்றாக படிக்கு மாணவன், கல்லூரிக்கு சென்ற பிறகு எப்படி 48 அரியர் வைக்கிறான் என்ன காரணம், கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு என்ன நடக்கும் என்பதைப் பற்றிய படம் தான் டிராகன்.
இன்றைய ஆடியன்ஸூம் இது போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தான் விரும்புகிறார்கள். இன்று வெளியான இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி இந்தப் படத்திற்கு பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ.12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக லவ் டுடே படத்திற்கு அவர் மொத்தமே ரூ.1.5 கோடி தான் சம்பளம் வாங்கியிருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது அவருக்கு ரூ.70 லட்சம் சம்பளம் கொடுத்த நிலையில், படம் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு ரூ.80 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு தெலுங்கு சினிமாவில் ஒரு படம் இயக்க பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டிருப்பதாகவும், அதற்கு அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தெலுங்கு அந்த நிறுவனத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.